என் மலர்
நீங்கள் தேடியது "Netherlands"

அமெரிக்காவை சேர்ந்தவர் மாணவி, சாரா பாப்பன்ஹெயிம் (வயது 21). இவர் நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் நகரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்து, இராஸ்மஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வந்தார்.
இந்த நிலையில் சாரா, தனது அறையில் கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு கடந்த புதன்கிழமையன்று தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்றபோது அவரது உயிர் பிரிந்திருந்தது. இந்தப் படுகொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சாரா வசித்து வந்த அதே அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆண் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் இன்தோவன் ரெயில் நிலையத்தில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலையின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை.
கொலை செய்யப்பட்ட சாரா, டிரம் இசைக் கலைஞரும் ஆவார், அமெரிக்காவில் மின்னசோட்டாவில் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
இவரது சகோதரர் ஜோஷ் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 21 வயதில் தற்கொலை செய்து கொண்டார். இப்போது சாராவும் கொலை செய்யப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்து விட்டது. #Netherland #AmericanStudent #Murder
புவனேஸ்வர்:
14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோற்று வெளியேறியது.
மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என்ற கோல்ணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
அரை இறுதிக்கு நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகியவை தகுதி பெற்றன. அரை இறுதி போட்டிகள் நாளை நடக்கிறது.
மாலை 4 மணிக்கு நடக்கும் முதல் அரை இறுதியில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதுவரை கோப்பையை பெறாத இங்கிலாந்து அணி 2-வது முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெல்ஜியம், இங்கிலாந்துக்கு கடும் சவால் அளிக்கும்.
மாலை 6.30 மணிக்கு நடக்கும் 2-வது அரை இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் தலா 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. கடந்த உலக கோப்பை (2014) இறுதிப் போட்டியில் ஆஸ்ரேலியாவிடம் நெதர்லாந்து தோற்றது.
அதற்கு பலி தீர்க்க நெதர்லாந்துக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #HockeyWorldCup2018 #Netherlands
14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘லீக்’ முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும்.
2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் விளையாடும். கடைசி இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றப்படும்.
மன்பிரித்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் 2-2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதன் மூலம் 7 புள்ளிகளுடன் கோல்கள் அடிப்படையில் இந்தியா கால்இறுதிக்கு தகுதி பெற்றது.
இதேபோல அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. மீதியுள்ள 4 அணிகள் 2-வது சுற்று மூலம் நுழையும்.
கிராஸ் ஓவர் என்று அழைக்கப்படும் 2-வது சுற்றில் பிரான்ஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, சீனா, பெல்ஜியம், கனடா, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா அணிகள் வெளியேற்றப்பட்டன.
இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் இங்கிலாந்து- நியூசிலாந்து. பிரான்ஸ், சீனா அணிகளும், நாளை நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம்- பாகிஸ்தான், நெதர்லாந்து, - கனடா அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்து- கனடா மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த ஆட்டம் 13-ந்தேதி நடக்கிறது.
நெதர்லாந்து அணி பலம் பொருந்தியவை என்பதால் அந்த அணி வெற்றி பெறலாம். இதனால் இந்திய அணி கால் இறுதியில் நெதர்லாந்துடன் மோத அதிகமான வாய்ப்பு உள்ளது. #worldcuphockey2018
பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 31ம் தேதி விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன. சாலைகளில் தடை அமைத்தும், டயர்களை கொளுத்தியும் அந்த அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி போராட்டத்தை திரும்ப பெற்றது. முக்கிய கட்சியான டிஎல்பி போராட்டத்தைக் கைவிட்டதால் பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பியது.

‘ஆசியா பீவியை இம்ரான் கான் அரசு விடுதலை செய்துள்ளது. நெதர்லாந்து தூதர் மற்றும் அதிகாரிகள் முல்தான் சிறைக்கு சென்று விடுதலையை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து ஆசியா பீவியை நெதர்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர் என டிஎல்பி கட்சி செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
அதேசமயம் இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் டிஎல்பி கட்சி தொண்டர்கள் திரண்டு, ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #AsiaBibi #AsiaBibiReleased #PakBlasphemy
நெதர்லாந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆஸ் நகரில் கார்கோ சைக்கிளில் சிறுவர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் சைக்கிள்மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கார்கோ சைக்கிள் மீது ரெயில் மோதியதில் 4 சிறுவர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
