search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு
    X

    நெதர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு

    • தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது.
    • மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    தர்மசாலா:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    தர்மசாலாவில் கடந்த 2 நாட்களாக மாலையில் லேசான மழை பெய்தது. இதேபோல் இன்று பிற்பகலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2.30 டாஸ் போடப்படும் எனவும் 3 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 2.20 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவன் வருமாறு:-

    தென்ஆப்பிரிக்கா:

    குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ககிசோ ரபடா, கேஷவ் மஜராஜ், இங்கிடி, ஜெரால்டு கோட்ஜி.

    நெதர்லாந்து:

    விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ டாவ்ட், காலின் அகேர்மான், பாஸ் டி லீட், தேஜா நிதாமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), சைபிரான்ட் இங்கில்பிரிட், வான்டெர் மெர்வ், லோகன் வான் பீக், ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.

    Next Story
    ×