என் மலர்
டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ், ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்
- சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
- இதில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஸ்பெயினின் டேவிடோவிச் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 7-5, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் கொரண்டின் மவுடெட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், ஸ்வரேவை சந்திக்க உள்ளார்.
Next Story






