என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Daniil Medvedev"
- சின்னர் அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார்.
- சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கால் இறுதி ஆட்டத்தில் 5-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவை (ரஷியா) எதிர்கொண்டார்.
இதில் சின்னர் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 39 நிமிட நேரம் தேவைப்பட்டது.
சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார். 25-ம் நிலை வீரரான ஜேக் டிராப்பர் (இங்கிலாந்து) 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் 10- வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார். 22 வயதான டிராப்பர் முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
- 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.
- முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.
முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார். இதனால் 4-6, 6-2, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரிடம் மெட்வதேவ் தோல்வியைத் தழுவினார்.
- முதல் காலிறுதியில் இருவரும் தலா 2 செட்களை போராடி வென்றனர்.
- வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றினார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், போலந்து வீரர் ஹுபர்ட் ஹர்காக்சுடன் மோதினார்.
இதில் இருவரும் தலா 2 செட்களை போராடி வென்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை மெத்வதேவ் கைப்பற்றினார்.
இறுதியில், மெத்வதேவ் 7-6 (7-4), 2-6, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
- அமெரிக்க ஓபன் தொடரில் 3-வது முறையாக மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க இளம் வீரர் பென் ஷெல்டன் ஆகியோர் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் 2-வது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் கார்லஸ் அல்காரஸ் - மெத்வதேவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றிய மெத்வதேவ் அடுத்த செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 3-வது செட்டை 6-3 என அல்காரஸ் கைப்பற்றினார். இதையடுத்து 4-வது செட்டில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3 என அல்காரஸை வீழ்த்தினார்.
இறுதியில் 7-6 (7-3) , 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் தொடரில் 3-வது முறையாக இவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் பிரேசில் வீரருடன் மோதினார்.
- இதில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் இன்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், 172-ம் நிலை வீரரான பிரேசிலின் தியாகோ செபோத் வைல்டுடன் மோதினார்.
முதல் செட்டை தியாகோ 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை மெத்வதேவ் 7-6, 6-2 என வென்று பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தியாகோ 4 மற்றும் 5வது செட்டை 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சுமார் 4 மணி 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
- நோவக் ஜோகோவிச்சை பின்னுக்குத் தள்ளி மெத்வதேவ் முதலிடம் பிடித்தார்.
- டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏ.டி.பி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 7,950 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7,075 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறினார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,770 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 4-வது இடம் பிடித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்