என் மலர்
நீங்கள் தேடியது "மெட்வெதேவ்"
- முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார்.
2025ஆம் ஆண்டுக்கான கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் சுற்றில் 13ஆம் நிலை வீரரான டேனில் மெட்வெதேவ், தரநிலை பெறாத பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் போன்சியை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெஞ்சமின் போன்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மெட்வெதேவ் ஐந்து செட் வரை மல்லுக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மல்லுக்கட்டியும் பயனில்லை. 3-6, 5-7, 7(7)-6(5), 6-0, 4-6 என தோல்வியடைந்தார்.
3ஆவது செட் டைபிரேக்கர் வரை சென்றது. டை பிரேக்கரில் மேட்ச் பாயின்ட் 5-4 என இருந்தபோது மைதானத்திற்குள் (Court) போட்டோகிராபர் வந்தார். இதனால் மெட்வெதேவ் கடும் கோபம் அடைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்.
தோல்வியடைந்த பின்னர் ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார். மெட்வெதேவின் செயல் போட்டியை நேரில் பார்த்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. போட்டி முடிந்த பின்னர், கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன் என மெட்வெதேவ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் மெட்வெதேவுக்கு 42,500 டாலர் அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய பண மதிப்பில் 37.24 லட்சம் ரூபாய் ஆகும். ஒழுங்கீனமாக நடந்ததற்காக 30 ஆயிரம் டாலரும், சேரில் அடித்து ராக்கெட்டை உடைத்ததற்காக 12,500 டாலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர் முதல் சுற்றுக்காக வாங்கிய சம்பளத்தின் 40 சதவீதம் ஆகும்.
- மெட்வதேவ் காலிறுதியில் 6-2, 7(9)-6(7) என நேர்செட் கணக்கில் நிக்கோலஸ் ஜார்ரியை வீழ்த்தினார்.
- சின்னர் தாமஸ் மக்காச்-ஐ 6-4, 6-2 என எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மியாமி ஒபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3 நிலை வீரரான டேனில் மெட்வதேவ், நிக்கோலஸ் ஜார்ரி-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மெட்வதேவ் 6-2 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கைப்பற்ற கடுமையான போராட வேண்டியிருந்தது. டை-பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை மெட்வதேவ் 7(9)-6(7) எனக் கைப்பற்றினார். இதன் மூலம் 2-0 (6-2, 7(9)-6(7)) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜென்னிக் சின்னர்- தாமஸ் மக்காச்-ஐ எதிர்கொண்டார். இதில் 2-ம் நிலை வீரரான சின்னர் 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் மெட்வதேவ்- சின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இன்று நடைபெறும் காலிறுதி போட்டிகளில் அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- மரோஸ்சன் ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதியில் மோதுவார்கள்.






