என் மலர்

  நீங்கள் தேடியது "Medvedev"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கச்சனோவ் 4-வது சுற்றில் 4-6, 6-3, 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் பஸ்டாவை வீழ்த்தினார்.
  • ஆஸ்திரேலியாவை நிக் கிர்கியோஸ் 7-6 (13-11), 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

  நியூயார்க்:

  கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா) 4-வது சுற்றில் சீனாவை சேர்ந்த ஷாங்சூயை எதிர்கொண்டார். இதில் கவூப் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

  கோகோ கவூப் கால் இறுதி ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) சந்திக்கிறார். கார்சியா 4-வது சுற்றில் 6-4 , 6-1 என்ற நேர் செட் கணக்கில் அலிசன் ரிஸ்கை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

  மற்றொரு ஆட்டத்தில் அஜ்லா டோமலிஜலோவிச் (ஆஸ்திரேலியா) 7-6 (10-8), 6-1 என்ற கணக்கில் லுட்மிலா சம்சோனாவை (ரஷிய) வீழ்த்தினார்.

  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், தர வரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

  ஆஸ்திரேலியாவை நிக் கிர்கியோஸ் 7-6 (13-11), 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். 23-வது வரிசையில் உள்ள அவர் கால் இறுதியில் ரஷியாவை சேர்ந்த கரென் கச்சனோவை எதிர்கொள்கிறார்.

  கச்சனோவ் 4-வது சுற்றில் 4-6, 6-3, 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் பஸ்டாவை வீழ்த்தினார்.

  5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) 6-1, 6-2, 6-7 (4-7), 6-2 என்ற கணக்கில் மவுட்டெட்டை (பிரான்ஸ்) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #AustralianOpen #Djokovic #Medvedev #Nishikori
  மெல்போர்ன்:

  இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 12-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அத்துடன் அவர் இந்த மாத இறுதி வரை நம்பர் ஒன் வீரராக நீடிப்பதை உறுதி செய்தார்.  மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-3, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ‘வைல்டு கார்டு’ வீரர் அலெக்ஸ் போல்ட்டை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான நிஷிகோரி (ஜப்பான்) 7-6 (8-6), 6-1, 6-2 என்ற நேர்செட்டில் போர்ச்சுகல் வீரர் ஜாவ் ஜோய்சாவை வெளியேற்றி 7-வது முறையாக 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் டானில் மெட்விடேவ் (ரஷியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாப்லோ கார்ரினோ பஸ்டா (ஸ்பெயின்), போர்னா கோரிச் (குரோஷியா), லூகாஸ் பொய்லி (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 4-வது சுற்றில் சிமோனா ஹாலெப்-செரீனா வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

  2018-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) தொடக்க சரிவில் இருந்து மீண்டு வந்து 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சீன தைபே வீராங்கனை சு வெய் ஹிக்கை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 7-6 (7-5), 6-2 என்ற நேர்செட்டில் சுவிட்சர்லாந்தின் டிம் பாசின்ஸ்கியை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி கண்டார். மற்ற ஆட்டங்களில் கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

  ×