என் மலர்
நீங்கள் தேடியது "Monte Carlo Masters"
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, இத்தாலியின் சிமொனே பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த இரு செட்களை7-6 (7-4), 10-7 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய டபிலோ 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஜோகோவிச் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் ஜெர்மன் வீரர் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் மெட்டியோ பெரேட்டினி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-2 ஸ்வரேவும், 2வது செட்டை 6- 3 என பெரேட்டினியும் வென்றனர்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பெரேட்டினி 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் பிரான்சின் முல்லர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்சின் அலெக்சாண்ட்ரே முல்லர், அர்ஜெண்டினாவின் யூகோ கேராபெல் உடன் மோதினார்.
இதில் முல்லர் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரரான கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-5 என மெத்வதேவும், 2வது செட்டை 6-4 என கச்சனாவும் வென்றனர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மெத்வதேவ் 6- 4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் மெத்வதேவ், முல்லரை சந்திக்கிறார்.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ-சிலியின் அலெஜாண்ட்ரோ ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 7-5 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் போபண்ணா ஜோடி, இத்தாலி ஜோடியுடன் மோதுகிறது.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- இதில் செக் குடியரசைச் சேர்ந்த மென்சிக் விலகியுள்ளார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த ஜாகுப் மென்சிக் மான்டே கார்லோ டென்னிஸ் தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
வரும் தொடர்களில் பங்கேற்க உள்ளதால் தற்போது ஓய்வு எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த வாரம் நடந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த முதல் காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் வென்றார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த முதல் காலிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் ஜெர்மனி வீரர் ஜேன் லென்னார்ட் ஸ்ட்ரப்பை சந்தித்தார்.
இதில் ரூப்லெவ் 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் வென்று அரையிதிக்கு முன்னேறினார்.
- டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனே மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- முன்னணி வீரரான ஜோகோவிச் 3வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த 2-வது காலிறுதி சுற்றில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதினார்.
இதில் பிரிட்ஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.
மற்றொரு காலிறுதியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனே, ரஷிய வீரர் மெத்வதேவுடன் மோதினார். இதில் ஹோல்ஜர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஏற்கனவே 3வது சுற்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் வென்றார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சை சந்தித்தார்.
இதில் ரூப்லெவ் 7-5, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
- இன்று நடந்த இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
மான்டே கார்லோ:
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது. இதில் இன்று நடந்த இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை சந்தித்தார்.
இதில் ரூனே முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-2, 7-5 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.






