என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சின்னர், நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சின்னர், நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேற்றம்

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • காலிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் இத்தாலியின் சின்னர் கனடாவின் பெலிக்ஸ் ஆகரை சந்திக்கிறார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ஒசாகா அமெரிக்காவின் அனிசிமோவாவை சந்திக்கிறார்.

    Next Story
    ×