search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madrid Open"

    • ஸ்வியாடெக் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
    • நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெலாரசின் சபலென்காவுடன் ஸ்வியாடெக் மோதுகிறார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஒபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரை இறுதியில் ஸ்வியாடெக் (போலந்து)-குடெர்மெடோவா (ரஷியா) மோதினர். ஸ்வியாடெக் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெலாரசின் சபலென்காவுடன் ஸ்வியாடெக் மோதுகிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதில் அல்காஸ் (ஸ்பெயின்)-கோரிக் (குரோஷியா), ஸ்ட்ரப் (ஜெர்மனி)-கரத்சேவ் (ரஷியா) மோதுகிறார்கள். முன்னதாக நேற்று நடந்த கால் இறுதியில் முன்னணி வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) தோல்வி அடைந்தார்.

    ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
    ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் மாட்ரி் ஓபன் டென்னிஸ் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 8-ம் நிலை வீரரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனாஸ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.



    இதில் ஜோகோவிச் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜோகோவிச் அரையிறுதியில் டொமினிக் தியெம்-ஐ கடும் போராட்டத்திற்குப்பின் ( 7(7)-6(2), 7(7)-6(4)) வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால், ஸ்டான் வாரிங்காவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-1, 6-2 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.  இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் நடால், ஸ்டெபானிசை எதிர்கொள்கிறார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐந்தாம் தரநிலைவீரர் டொமினிக் தீமிடம் 3-6, 7-6(11), 6-4 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். வெற்றி பெற்ற டொமினிக் தீம், அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சுடன் மோதுகிறார். 
    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஒபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் ஜோகோவிச் - மரின் சிலிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன. #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு  முந்தைய சுற்றில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் சார்டியை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 7(7) - 6 (2) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச் லாஸ்லோ டேர்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மரின் சிலிச் 4-6 என அதிர்ச்சிகரமாக தோற்றார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட சிலிச் 2-வது செட்டை 6-3 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.



    6-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி வாவ்ரிங்காவிடம் 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 5-ம் நிலை வீரரான தியெம் 6-4, 7-5 என போக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடுகிறார். ரோஜர் பெடரர் தியெம்-ஐ எதிர்த்தும், அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்த்தும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸில் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் கயல் மான்பில்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #MadridOpen #RogerFederer
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் பிரான்ஸ் வீரரான கயல் மான்பில்சை எதிர்கொண்டார். இதில், 6-0, 4-6, 7-6 (3) என்ற கணக்கில் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இது அவரது 1200வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #MadridOpen #RogerFederer 
    மாட்ரிட் ஒபன் டென்னிஸில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் ஆஷ்லே பார்ட்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



    முதல் ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் 3-ம் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டியை எதிர்கொண்டார். இதில் 7-5, 7-5 என நேர்செட் கணக்கில் ஹாலெப் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸில் நவோமி ஒசாகா, கிகி பெர்ட்டன்ஸ், சிமோனா ஹாலெப் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    ஒரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டன்ஸ் 12-ம் நிலை வீராங்கனையான செவஸ்டோவாவை எதிர்கொண்டார். இதில் கிகி பெர்ட்டர்ன்ஸ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் விக்டோரியா குஸ்மோவாவை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-0, 6-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.



    முதல் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் சான்ஸ்னோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    இத்தாலி ஓபன் பட்டத்தை வென்ற ரபெல் நடால் ஐந்தாவது முறையாக மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். #Nadal #ItalianOpen
    ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபெல் நடால் உலகத் தரவரிசையில் பெடரரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்திருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் காலிறுதியில் டொமினிக் தியெம் இடம் தோல்வியடைந்திருந்தார். இதனால் தரவரிசையில் முதல் இடத்தை இழந்தார்.



    நேற்று நடைபெற்ற இத்தாலி ஓபன் இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ 6-1, 1-6, 6-3 என வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் கடந்த வாரம் இழந்த நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பிடித்தார். நடால் ஐந்து முறை நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

    வருகிற 27-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபனில் சிறப்பாக விளையாடி பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையில் நடால் உள்ளார்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.#MadridOpen
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம்மை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அலெக்சாண்டர் ஸ்வேரேவ் வென்ற 3-வது ஏ.டி.பி. உலக டூர் மாஸ்டர்ஸ் பட்டம் இதுவாகும். #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார். #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி நேற்று நடைபெற்றது. இதில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இந்த தொடருக்கான தரவரிசை பெறாத கிகி 10-ம் நிலை வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட் ‘டை பிரேக்’ வரை சென்றது. இறுதியில் கஷ்டப்பட்டு கிவிட்டோவா 7(8) - 6(6) என கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 4-6 என இழந்தார்.



    2-வது செட்டை இழந்த கிவிட்டோவா சுதாரித்துக் கொண்டு சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் கடைசி செட்டில் ஆக்ரோஷமான விளையாடி 6-3 என கைப்பற்றினார். கிகி பெர்டென்ஸை 2-1 என வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கிவிட்டோவா.

    ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் தியெம் - ஸ்வெரேவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தார். #MadridOpen #DominicThiem
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியின் அரையிறுதி நேற்று நடைபெற்றது.

    இந்த போட்டியில், 7ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் மோதினர்.

    தொடக்கத்தில் இருந்து சிறப்பாக ஆடிய டொமினிக் தீம் 6-4 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய டொமினிக் தீம் 6-2 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றி அசத்தினார்.

    இதையடுத்து, 6-4, 6-2 என்ற கணக்கில் கெவின் ஆண்டர்சனை வீழ்த்திய டொமினிக் தீம் முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

    இவர் காலிறுதியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #MadridOpen #DominicThiem
    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கால் இறுதியில் ரபெல் நடால் 7-ம் நிலை வீரரான டொமினிக் திம்மிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.#MadridOpen #Nadal
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) தோற்கடித்தார். இதன் மூலம் களிமண் தரை ஆடுகளத்தில் நடால் தொடர்ச்சியாக 50 செட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு ஆடுகளத்தில் தொடர்ச்சியாக அதிக செட்டுகளை வென்றவர் என்ற சிறப்பை நடால் பெற்றார். இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் ஜான்மெக்கன்ரோ தரைவிரிப்பு ஆடுகளத்தில் (கார்பெட்) தொடர்ந்து 49 செட்டுகளை வென்றதே சாதனையாக இருந்தது. அவரது 34 ஆண்டு கால சாதனையை நடால் முறியடித்து இருக்கிறார்.

    நடால் நேற்று கால்இறுதியில் 7-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார். இதில் நடால் 5-7, 3-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா கார்சியாவை (பிரான்ஸ்) வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.#MadridOpen #Nadal
    ×