என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மெத்வதேவுக்கு அதிர்ச்சி அளித்த காஸ்பர் ரூட்
    X

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மெத்வதேவுக்கு அதிர்ச்சி அளித்த காஸ்பர் ரூட்

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
    • ரஷிய வீரர் மெத்வதேவ் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஒன்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், நார்வே வீரர் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய காஸ்பர் ரூட் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தினார். இதன்மூலம் காஸ்பர் ரூட் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் காஸ்பர் ரூட், அர்ஜெண்டினா வீரர் பிரான்சிஸ்கோ செருண்டலோவை சந்திக்கிறார்.

    Next Story
    ×