என் மலர்
டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: மேடிசன் கீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
- காலிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் மேடிசன் கீஸ் மோதினர்.
- முதல் செட்டை ஸ்வியாடெக் 0-6 என இழந்தார்.
மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) மோதினர்.
இதில் முதல் செட்டை ஸ்வியாடெக் 0-6 என இழந்தார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 2 செட்டுகளையும் ஸ்வியாடெக் வென்றார்.
இதன்மூலம் காலிறுதியில் 0-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மேடிசன் கீஸை வீழ்த்தி ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
Next Story






