என் மலர்
நீங்கள் தேடியது "champion"
- மாவட்ட ஆக்கி போட்டியில் திருநகர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் மதுரை அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் தேசியவிளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை பிரிட்டானியா நீயூட்ரிசன் பவுன்டேசன் சார்பாக 14வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாவட்டஅளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 8அணிகள் விளையாடினர்.இதன் இறுதிபோட்டியில் திருநகர் இந்திரகாந்தி மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட திட்டஅலுவலர் ரஞ்சிதா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்டஉடற்கல்வி ஆய்வாளர் வினோத் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கினார். முடிவில் உடற்கல்விஆசிரியர் ராஜா நன்றிகூறினார். இதன்ஏற்பாடுகளை உடற்கல்விஆசிரியர்கள் செந்தில்குமார்,சுரேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தராஜ், வாஞ்ஜிநாதன், தேவிப்ரியா, பானுப்ரியா, ஜஹீன்கௌசர் ஆகியோர் செய்திருந்தனர்.
- போட்டியில் 1.1 கோடி பேர் கலந்துக் கொண்ட நிலையில், கடைசியாக 11 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றினர்.
- விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த சர்லோட் வால்ஷ் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஸ்பெல்லிங் பீ என்கிற கடினமான சொற்கள் உச்சரிப்பு போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 24வது ஆண்டின் போட்டி மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 1.1 கோடி பேர் கலந்துக் கொண்ட நிலையில், கடைசியாக 11 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றினர். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 வயது சிறுவன் தேவ் ஷாஹ் கடினமான 11 வார்த்தையை சரியாக சொல்லி முதல் பரிசை தட்டிச் சென்றார்.
ப்ளோரிடா மாகாணத்தில் வசித்து வரும் தேவ் ஷாஹ் இந்த ஆண்டின் 22வது சாம்பியன் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், சிறுவனுக்கு ரூ.41 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இவரை தொடர்ந்து, விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த சர்லோட் வால்ஷ் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
வெற்றி குறித்து பேசிய சிறுவனர் தேவ் ஷாஹ், "என்னால் நம்ப முடியவில்லை, என் கால்கள் இன்னும் நடுங்குகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
- மதுரை அணி சாம்பியன் பெற்றது.
- பயிற்சியாளர் சுந்தரராஜாவை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.
மதுரை
மதுரை திருநகர் விளையாட்டு மைதானத்தில் தென்மாவட்ட அளவிலான 15 வயதிற்குட்பட்டோர் ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. தென்மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன.
இதில் கால் இறுதி போட்டியில் திண்டுக்கல் எச்.எப்.ஏ. அணியையும், அரை இறுதி போட்டியில் அக்மே அரினா அணியையும் வென்று மதுரை ஆர்.எல்.எப்.ஏ. அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதி போட்டியில் அக்மே எப்.ஏ.ஏ. அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று மதுரை ஆர்.எல்.எப்.ஏ. அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சுந்தரராஜாவை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.
- கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி விளையாட்டு குழு சார்பில் தேசிய அளவிலான 5.ஏ.சைட் எனப்படும் ஹாக்கி போட்டி நடந்தது.
- ஊசுடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி சீறுடை வழங்கி போட்டியை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி:
கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி விளையாட்டு குழு சார்பில் தேசிய அளவிலான 5.ஏ.சைட் எனப்படும் ஹாக்கி போட்டி நடந்தது.
ஊசுடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி சீறுடை வழங்கி போட்டியை துவக்கி வைத்தார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் பாபு, கே.எம்.பி லோகையன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் புதுவை, பூணே, கொச்சின், சென்னை எஸ்.ஆர்.எம்அணி கொல்கத்தா, மதுரை, தர்மபுரி, ஊட்டி ஆகிய பகுதியிலிருந்து 24 அணிகள் பங்கேற்றது. 2 நாட்கள் நடந்த போட்டியில் முதல் பரிசை சென்னை எஸ்.ஆர்.எம் அணி பெற்றது.
முதல் பரிசு வென்ற எஸ்.ஆர்.எம் அணிக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ரூபாய் 20 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கோப்பை வழங்கி பாராட்டினார்.
இந்த அணிக்கான சுடர் கேடையத்தை ஏ.டி.எஸ் தாமோதரன் வழங்கினார். இரண்டாம் பரிசை தர்மபுரி பாலக்கோடு அணி வென்றது. இந்த அணிக்கு பாஜக மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் ரூ. 15,000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். மனிதநேய மக்கள் சேவை இயக்க இளைஞர் அணி தலைவர் விநாயகம் இந்த அணிக்கு சுழற் கேடயத்தை வழங்கினார்.
3-ம் பரிசு வென்ற புதுச்சேரி ஜெம்ஸ் ஹாக்கி கிளப் பணிக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகையுடன் கோப்பையை அய்யனார் வழங்கினார் அதற்கான சுழற் கேடயத்தை திவாகர் மேனன் வழங்கினார். இந்த போட்டியில் நான்காம் பரிசு வென்ற அர்ஜுனா ஹாக்கி கிளப் கூடப்பாக்கம் அணியினருக்கு ரூபாய் 5000 ரொக்க பரிசினை ராம.சிவராஜன் வழங்கினார்.
இந்த அணிக்கு சுழற் கேடயத்தை பிரபாகரன் வழங்கினார். இவ்விழாவில் லே பாண்டிச்சேரி ஹாக்கி சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் அன்பழகன், முன்னாள் தலைவர் ராஜசேகர், ஓஎன்ஜிசி முன்னாள் செயலர் பழனி, செந்தில் மற்றும் காக்கிசங்க நிர்வாகிகள் பங்கு பெற்றனர் பரிசிறப்பு விழாவில் அர்ஜுனாகி கிளப் தலைவர் ராமு நன்றி கூறினார். தொடர் நாயகன் விருதை எஸ்.ஆர்.எம். அணியின் வீரர் அகிலனுக்கும், தொடரில் சிறந்த தடுப்பு ஆட்டக்காரராக அர்ஜுனா ஹாக்கி கிளப்பை சேர்ந்த அருணாச்சலத்துக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி கிளப் நிர்வாகிகள் பச்சையப்பன் கருணாகரன் சதீஷ் உலக பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாநில கபடி போட்டி வடிவேல்கரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- 4 முதல் 16 பரிசுகள் கோப்பைகளும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நேதாஜி கிரிக்கெட் கிளப், பி.டி.பி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து 5-ம் ஆண்டு மாநில கபடி போட்டியை நடத்தியது. பேரூராட்சி தலைவர் மு. பால் பாண்டி யன் தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் நித்திய பிரியா முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதும் 106 அணிகள் பங்கேற்று மின் ஒளியில் இரவிலும் பகலிலும் விளையாடினர். இறுதியில் 5 அணிகள் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.
இந்த போட்டியில் முதல் இடம் பெற்ற வடிவேல்கரை அணிக்கு கே.டி.ரஞ்சித் நினைவு சுழல் கோப்பையும் மற்றும் கவுன்சிலர் கார்த்திகா ராணி மோகன் சார்பாக ரொக்க பணம் ரூ.20 ஆயிரம் வழங்கப் பட்டது. 2-ம் இடம் பிடித்த தொண்டூர் அணிக்கு மாயக் கண்ணன் சகோதரர்கள் சார்பாக ஆர்.எஸ்.மீனாட்சி தர்மராஜ் நினைவு சுழல் கோப்பை, கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யாசாமி நினைவாக வைரமணி சகோதரர்கள் சார்பாக ரொக்க பணம் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 3-ம் இடம்பிடித்த மேலக்குயில்குடி அணிக்கு முன்னாள் ராணுவ வீரர் ராஜா சகோதரர்கள் சார்பாக சோனை நினைவு சுழல் கோப்பையும், சுந்தர ஜெயமணி சார்பாக ரொக்க பணம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. அதுபோல் 4 முதல் 16 பரிசுகள் கோப்பைகளும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.
போட்டியின் நடுவர்களாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகத்தை சேர்ந்த மூர்த்தி தலைமையில் சுரேஷ்,பாண்டி செல்வம், பாலமுருகன், காமேஸ்வரன் ஆகியோர் பணி செய்தனர். இதன் ஏற்பாடுகளை நேதாஜி கிரிக்கெட் கிளப் மற்றும் பி.டி.பி விளையாட்டு கிளப்பினர் செய்திருந்தனர்.
- புதுவை கால்பந்து சங்கம் 2022-23 ஆண்டிற்கான லீக் சாம்பியன்ஷிப் போட்டி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வரை நடைபெற்றது.
- இதில் ஜேப்பியார் அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்று கோப்பை வென்றது. 2-வது இடத்தை குப்புராஜ் அணியும், ஈகல்ஸ் அணி 3-வது இடத்தையும் பிடித்தது.
புதுச்சேரி:
புதுவை கால்பந்து சங்கம் 2022-23 ஆண்டிற்கான லீக் சாம்பியன்ஷிப் போட்டி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வரை நடைபெற்றது.
போட்டியில் ஆண்கள் பிரிவில் மொத்தம் 34 அணிகள் பங்கேற்றன. இதில் 14 பேர் ஏ பிரிவு அணிகளாகவும, மற்றும் 20 பேர் பி பிரிவு அணிகளாகவும் பிரிக்கப்பட்டு விளையாடி வந்தனர்.
இதற்கான ஏ பிரிவு இறுதி போட்டியில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் அணியும், குப்புராஜ் விளையாட்டு கழகமும் விளையாடியது. இதில் ஜேப்பியார் அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்று கோப்பை வென்றது. 2-வது இடத்தை குப்புராஜ் அணியும், ஈகல்ஸ் அணி 3-வது இடத்தையும் பிடித்தது.
பி பிரிவில் அர்சினல் விளையாட்டு கழகம் முதலிடமும், 2-வது இடத்தில் ஆல்வார் விளையாட்டு கழகம் 3-வது இடத்தை சிட்டி-5 அணி பிடித்தது. இதன் மூலம் பி பிரிவில் வென்ற 3 அணிகளும் ஏ பிரிவுக்கு தகுதியாகியுள்ளது. மகளிருக்கான போட்டியில் 6அணிகள் மோதின. இதில் செல்டிக் குயின்ஸ் முதலிடமும், ஐ.ஜி.ஏ.எஸ்.இ. 2-வது இடத்தையும், அண்ணா அணி 3-வது இடத்தையும் பிடித்தனர்.
சப்- ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. இதில் ஜேப்பியார் அணி முதலிடமும், கிருஷ்ணன் மெமோரியல் அணி 2-வது இடமும் பிடித்தது. இதற்கான பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
புதுவை கால்பந்து கழக சேர்மன் ஜான்குமார்
எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் விவிலியன் ரிச்சர்ட்ஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சங்க தலைவர் நெஸ்டர், செயலாளர் தனசேகர், துணைத் தலைவர்கள் ராஜேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, துணைச்செயலாளர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமரன், கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், வினோத்குமார், முனியாண்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது.
- தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி:
தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்பதை வலியுறுத்தி, தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சிக் கழக பொதுச்செயலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி அரசு மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன், தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிப் பேசினார்.
இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமத் ஸ்ரீதர் சுவாமிகள் யோகா சென்டரில் பயின்ற மாணவி ஜெயவர்தினி (வயது 12), அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, தாய்லாந்தில் நடைபெறவுள்ள இண்டர்நேஷனல் அளவிலான யோகா போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவிக்கு எம்.எல்.ஏ., ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.
போட்டியில், கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் மெட்ரிக் பள்ளி சாத்தூர் கே.சி.ஏ.டி. மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று முதலிடம், கோவில்பட்டி சபரீஸ் ஜெயன் ஜூனியர் கிளப் மற்றும் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இண்டர்நேஷனல் பள்ளி 2-ம் இடம், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி, கயத்தாறு தமிழர் போர்க்கலை சிலம்பம் ஆகியவை 3-வது இடத்தையும் பெற்றன.
தமிழ் கல்சுரல் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துணை செயலர் சூரியநாராயணன் வரவேற்றார். பொருளாளர் சிவசக்திவேல்முருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ் கல்சுரல் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பெண்கள் கையுந்து பந்து போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டம் பெற்றது
- கையுந்து பந்து போட்டியில் 18 கல்லூரி அணிகள் கலந்துகொண்டது
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் கையுந்து பந்து போட்டி திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியினை புதுக்கோட்டை மேலசிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தியது.இதில் திருச்சி, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுகை, பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையான கல்லூரி அணிகள் பங்கேற்றன.18 கல்லூரி அணிகள் கலந்துகொண்ட கையுந்து பந்து போட்டியில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, கரூர் அரசு கல்லூரியை 25-13, 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவிகளுக்கான வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றது.மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 25-13, 22-25, 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.வெற்றி பெற்ற வீராங்கனைகளை ஜமால் முகமது கல்லூரியின் செயலரும், தாளாளருமான ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால் முஹம்மது, உதவிச்செயலர் கே.அப்துஸ் சமது, கௌரவ உறுப்பினர் முனைவர் கே.என்.அப்துல்காதர் நிஹால் முதல்வர் முனைவர் கே.என்.முகமது பாசில் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் பி.எஸ்.ஷாஇன்ஷா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
- அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
- தாராபுரம் குறுமைய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.
காங்கயம்:
2022-2023-ம் ஆண்டிற்கான தாராபுரம் குறுமைய அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர், மூலனூர், காங்கயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் காங்கயம் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் குழு போட்டிகளில் 205 புள்ளிகள் பெற்று தாராபுரம் குறுமைய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.
தடகள போட்டியில் இந்த பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி 1,500, 800 மீட்டர் போட்டியில் முதலிடமும், 3 ஆயிரம் மீட்டர் போட்டியில் 2-ம் இடமும் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ஹரிஸ் குண்டெறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், கோகுல் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும், ஹெர்மன் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவன் விங்கேஷ்வரன் வட்டு எறிதல் போட்டியில் முதலிடமும் பெற்று மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற் சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜீவகுமார், ராம்கி ஆகியோரையும், பள்ளி தலைவர் கோபால், தாளாளர் பழனிசாமி, பொருளாளர் மோகனசுந்தரம், அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
- சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம் வந்தநல்லூரில் 2 நாட்கள் நடைபெற்றது.
- பெண்கள் பிரிவில் 21 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீ கலைவாணி பள்ளி பெண்கள் பிரிவு முதலிடம் பெற்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம் வந்தநல்லூரில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 38 பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரிவிலும், மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இதில் மாணவர்கள் பிரிவில் 28 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் பெற்று முதலிடம் பெற்றனர். அதேபோன்று பெண்கள் பிரிவில் 21 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீ கலைவாணி பள்ளி பெண்கள் பிரிவிலும் முதலிடம் பெற்றனர். இளையோர் பிரிவில் சந்தோஷ், மூத்தோர் பிரிவில் பவேஷ், மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
பெண்கள் மூத்தோர் பிரிவில் கனிமொழி, தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வட்டார அளவில் முதலிடம், 2-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்களை பள்ளி தாளாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.