என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிய ஆக்கி போட்டி"
- தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
- நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
பீகாரில் நடந்த ஆக்கி ஆடவர் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
இதன்மூலம், ஆசிய கோப்பை தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
ஆசியகோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 2026-ல் நடைபெறும் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
- சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
- இரு அணிகளும் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் சூப்பர் 4 சுற்று முடிவடைந்தது.
சூப்பர் 4 சுற்று முடிவில் இந்தியா 2 வெற்றி, 1 டிராவு டன் 7 புள்ளியுடன் முதல் இடத்தையும், தென் கொரியா 4 புள்ளியுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. மலேசியா, சீனா தலா 3 புள்ளிகள் பெற்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்திய அணி தென் கொரியாவை வீழ்த்தி 4-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2003, 2007, 2017 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்த தொடரிலும் இரு அணிகளும் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகள் மோதுகின்றன.
- இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
- சீனா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் ஏ பிரிவில் உள்ளன.
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. சீனா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.
நேற்றைய தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் மலேசியா 4-1 என்ற கோல் கணக்கில் வங்காள தேசத்தையும், தென் கொரியா 7-0 என்ற கணக்கில் சீன தைபேயையும் (பி பிரிவு), ஜப்பான் 7-0 என்ற கணக்கில் கஜகஸ்தானையும் வீழ்த்தின.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஜப்பானை நாளை எதிர்கொள்கிறது. மாலை 3 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சீனா- கஜகஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் வங்காள தேசம்-சீனதைபே, தென் கொரியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.
- 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஆக்கி போட்டி அரங்கேறுகிறது.
- இந்த போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்டு 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆக்கி போட்டி நடக்கிறது.
16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஆக்கி போட்டி அரங்கேறுகிறது. இந்த போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதில் இந்தியாவுடனான உறவு சீராக இல்லாததால் பாகிஸ்தான், சீனா அணிகள் இந்த போட்டியில் பங்கேற்குமா? என்பதில் சந்தேகம் நிலவியது. ஆனால் பாகிஸ்தான், சீனா அணிகள் ஆசிய ஆக்கி போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்து இருப்பதாக ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று தெரிவித்தது.
- ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது.
- இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.
நெல்லை:
ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
இந்தியா 3 முறை பட்டம்
ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆக்கி போட்டியில் ஆசியாவில் இருந்து 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது. இந்த முறையும் வெற்றி பெறுவதற்கு வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று வர வேண்டும் என்பதற்காக சமீபத்தில் சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நெல்லை வந்தது
தொடர்ந்து நேற்று கன்னியாகுமரிக்கு வந்தடைந்த இந்த கோப்பை யானது இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. முன்னதாக, கன்னியா குமரியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த டிராபியை அர்ஜுனா விருது பெற்ற வீரர் மணத்தி கணேசன் பெற்றுக்கொண்டார்.
பின்னர் மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்களிடம் அதனை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் சரவணன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் கிருஷ்ண சக்கர வர்த்தி வரவேற்றார். ஆசிய ஆக்கி கோப்பை பற்றிய வரலாறை முன்னாள் விளையாட்டு அலுவலர் ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து டிராபியை அம்பைக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கும், வீரர்களுக்கும் கலெக்டர் கார்த்திகேயன் மரக்கன்று கள் வழங்கினார். மேலும் வீரர்களுக்கு ஆக்கி மட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆக்கி தொடர்பான காட்சி போட்டி நடைபெற்றது.






