search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AsiaCup"

    • பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான் 43 ரன்கள் அடித்தார்.
    • புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசம் 10 ரன் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    மற்றொரு வீரர் ரிஸ்வான் 43 ரன்கள் அடித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவிடம் வீழ்ந்தார். இப்திகர் அகமது 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஷாநவாஸ் தஹானி 16 ரன்களும், ஹரிஸ் ரவூப் 13 ரன்களும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும், ஆவேஷ்கான் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். இதையடுத்து 148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கி உள்ளது.

    ×