என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India A"

    • முதல் அரையிறுதி ஆட்டம் தோகாவில் இன்று நடந்தது.
    • சூப்பர் ஓவரில் வென்ற வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    தோகா:

    வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

    லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த வங்காளதேசம், இலங்கை அணியும், பி பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சோகன் 65 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன வைபவ் சூர்யவன்ஷி - பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சூர்யவன்ஷி 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரியன்ஷ் ஆர்யா 44 ரன்னிலும், ஜிதேஷ் சர்மா 33 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 15 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    சூப்பர் ஓவரில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதல் பந்தில் ஜிதேஷ் சர்மா போல்டானார். அடுத்து வந்த அசுதோஷ் சர்மா 2-வது பந்தில் கேட்ச் ஆனார். இதன்மூலம் இந்திய அணி சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது.

    சூப்பர் ஓவரில் ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியும் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது. 2-வது பந்து வைடாக சென்றது. இதனால் வங்கதேச அணி திரில் வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    • முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது
    • வைபவ் சூர்யவன்ஷி 42 பந்தில் 15 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்தார்.

    தோஹா:

    இளம் வீரர்களுக்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடைபெற்ற குரூப் ஏ லீக் போட்டியில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொண்டது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது

    தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடி 32 பந்துகளில் சதமடித்து வரலாறு படைத்தார். அவர் 42 பந்தில் 15 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜிதேஷ் சர்மாவும் அதிரடியாக ஆடி 32 பந்தில் 6 சிக்சர், 8 பவுண்டரியுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த இன்னிங்சில் இந்திய அணி 25 சிக்சர், 24 பவுண்டரிகள் அடித்தது.

    வைபவ் சூர்யவன்ஷி 15 சிக்ரும், ஜிதேஷ் சர்மா 6 சிக்சரும் அடித்தனர்.

    அடுத்து ஆடிய யுஏஇ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

    இந்தியா ஏ அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் அடித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

    • தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியா ஏ அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. இந்தியா ஏ அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    திலக் வர்மா தலைமை தாங்க, ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா ஏ அணி விவரம்:-

    திலக் வர்மா (கேப்டன்), ருதுராக் கெய்க்வாட் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம், மானவ் சுதார், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது

    இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்குகிறது.

    • இந்தியா ஏ அணி நவம்பர் 16-ம் தேதி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.
    • ஐ.பி.எல். நட்சத்திரம் பிரியன்ஷ் ஆர்யாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    கத்தாரில் நடைபெற உள்ள ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025-க்கான இந்தியா ஏ அணிக்கு ஜிதேஷ் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். பஞ்சாப் ஆல்ரவுண்டர் நமன் தீர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய டி20 விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 15 பேர் கொண்ட அணியை தலைமையேற்று வழிநடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதிரடி பேட்ஸ்மேன் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வைபவ் சூரியவன்ஷி 14 வயதில் இந்திய ஏ அணியில் ஆசிய கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஐ.பி.எல். நட்சத்திரம் பிரியன்ஷ் ஆர்யாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

    ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை இம்மாதம் 14 முதல் 23-ம் தேதி வரை கத்தாரில் நடைபெறுகிறது. ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் ஏ அணிகளுடன் குரூப் பி பிரிவில் இந்திய ஏ அணி இடம்பெற்றுள்ளது.

    ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்தியா ஏ அணியின் விவரம் வருமாறு:

    பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, நமன் தீர் (துணை கேப்டன்), சூர்யன்ஷ் ஷெட்கே, ஜிதேஷ் சர்மா (கேப்டன் - விக்கெட் கீப்பர்) , ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாக்கூர், குர்ஜப்னீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்வீர் சிங் சரக், அபிஸ்.

    ஸ்டாண்ட் பை வீரர்கள்: குர்னூர் சிங் ப்ரார், குமார் குஷாக்ரா, தனுஷ் கோட்டியன், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத்.

    இந்தியா ஏ அணி நவம்பர் 16-ம் தேதி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.

    ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறை வென்றதில் ஜிதேஷ் சர்மா அபரிமித பங்களிப்புகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதல் இன்னிங்சில் இந்தியா 194 ரன்களில் சுருண்டு 226 ரன்கள் பின்தங்கியிருந்தது.
    • 2ஆவது இன்னிங்சில ஆஸ்திரேலியா ஏ அணி 226 ரன்னில் சுருண்டது.

    இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2ஆவது டெஸ்ட் லக்னோவில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ முதல் இன்னிங்சில் 420 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ 194 ரன்களில் சுருண்டது. சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 226 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. குர்னூர் பிரார், மனாவ் சுதர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்த ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சில் 185 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 411 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களம் இறங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது, சாய் சுதர்சன் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 4ஆவது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சாய் சுதர்சனுடன் இணைந்து கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாய் சுதர்சன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரெல் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    கே.எல். ராகுல் 176 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ஏ அணி 91.3 ஓவரில் 413 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது.

    • இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.
    • ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன 2நிலையில், ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்திய 'ஏ' அணிஅணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகியதால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்தியா A அணியை பிசிசிஐ அறிவித்தது. ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    1வது ஒரு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணி:-

    ஷ்ரேயாஸ் ஐயர் (C), பிரப்சிம்ரன் சிங் (WK), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுதிர் சிங், ரவி பிஷ்னாய், அபிஷேக் போரல், பிரியான்ஷ் ஆர்யா, சினுர்ஜீத் சிங்

    இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி:

    ஷ்ரேயாஸ் லியர் (C), திலக் வர்மா (VC), அபிஷேக் ஷர்மா, ப்ரப்சிம்ரன் சிங் (WK), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகாம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், துதிஷ்னோ சிங், துதிஷ்னோ சிங், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், 

    • டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் எடுத்தது.

    லக்னோ:

    இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இரு அணிகளிக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது.

    இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய 'ஏ' அணி கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார். இதனால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்கள் குவித்தார்.

    இந்திய தரப்பில் மனவ் சுதர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

    இவர் 2024-25 துலீப் டிராபியில் இந்தியா சி அணிக்காக விளையாடிய இவர், இந்தியா பி அணிக்கு எதிராக 82 ரன்கள் அடித்தார் மற்றும் ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியைப் பெற உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியா ஏ அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று லக்னோவில் தொடங்கியது.
    • இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார்.

    லக்னோ:

    இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில் இரு அணிகளிக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய 'ஏ' அணி கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார்.

    அவர் அணியை விட்டு வெளியேறி மும்பை திரும்பினார். இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கு எதிராக, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்(4 நாட்கள்) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி லக்னோவில் தொடங்க உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி உடனான இரண்டு 4 நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    சமீபத்தில் வெளியான தகவலின் படியே, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில், இந்திய அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், துணை கேப்டன், விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, யாஷ் தாகூர்.

    • இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    நார்த்தம்டான்:

    இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டானில் நடந்து வருகிறது.

    முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 89.3 ஓவரில் 348 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 116 ரன்கள் அடித்தார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங், ஜார்ஜ் ஹில் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக எமிலோ ஹே 71 ரன் எடுத்தார்.

    இந்தியா ஏ சார்பில் கலீல் அகமது 4 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே, கம்போஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 21 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை ஆடியது. கே.எல்.ராகுல் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் பொறுப்புடன் ஆடி 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய ஏ அணி 184 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    நார்த்தம்ப்டன்:

    இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் நார்த்தம்ப்டனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய ஏ அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 17 ரன்னும், கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 11 ரன்னும் எடுத்தனர். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 15 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும்.

    கருண் நாயர் 40 ரன்னில் அவுட்டானார். நடுவரிசையில் சிறப்பாக ஆடி அதிரடி காட்டிய துருவ் ஜூரல் 52 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 81 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • இந்திய அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 104 ரன்கள் விளாசினார்.

    கொழும்பு:

    வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா ஏ- பாகிஸ்தான் ஏ அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணி 48 ஓவர்களில் 205 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன்கள் சேர்த்தார். சாகிப்சதா பர்கான் 35 ரன்கள், முபாசிர் கான் 28 ரன்கள், ஹசீபுல்லா கான் 27 ரன்கள் எடுத்தனர்.

    இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. துவக்க வீரர் சாய் சுதர்சன் பந்துகளை பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்தார். அபிஷேக் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகின் ஜோஸ் 53 ரன்கள் சேர்த்தார். 

    இதனால் இந்தியா 36.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 104 ரன்களுடனும், கேப்டன் யஷ் துல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி, குரூப்- பி பிரிவில் தான் மோதிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    ×