என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை: இந்தியா ஏ அணி கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா
- இந்தியா ஏ அணி நவம்பர் 16-ம் தேதி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.
- ஐ.பி.எல். நட்சத்திரம் பிரியன்ஷ் ஆர்யாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
புதுடெல்லி:
கத்தாரில் நடைபெற உள்ள ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2025-க்கான இந்தியா ஏ அணிக்கு ஜிதேஷ் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். பஞ்சாப் ஆல்ரவுண்டர் நமன் தீர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 15 பேர் கொண்ட அணியை தலைமையேற்று வழிநடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிரடி பேட்ஸ்மேன் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வைபவ் சூரியவன்ஷி 14 வயதில் இந்திய ஏ அணியில் ஆசிய கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். நட்சத்திரம் பிரியன்ஷ் ஆர்யாவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை இம்மாதம் 14 முதல் 23-ம் தேதி வரை கத்தாரில் நடைபெறுகிறது. ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் ஏ அணிகளுடன் குரூப் பி பிரிவில் இந்திய ஏ அணி இடம்பெற்றுள்ளது.
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்தியா ஏ அணியின் விவரம் வருமாறு:
பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, நமன் தீர் (துணை கேப்டன்), சூர்யன்ஷ் ஷெட்கே, ஜிதேஷ் சர்மா (கேப்டன் - விக்கெட் கீப்பர்) , ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாக்கூர், குர்ஜப்னீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்வீர் சிங் சரக், அபிஸ்.
ஸ்டாண்ட் பை வீரர்கள்: குர்னூர் சிங் ப்ரார், குமார் குஷாக்ரா, தனுஷ் கோட்டியன், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத்.
இந்தியா ஏ அணி நவம்பர் 16-ம் தேதி பாகிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறை வென்றதில் ஜிதேஷ் சர்மா அபரிமித பங்களிப்புகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






