என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்தியா ஏ"
- ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2-வது இடம் பிடித்தது.
- ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.
அனந்தபூர்:
துலீப் கோப்பை தொடரின் 3-வது மற்றும் கடைசி ரவுண்ட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்றன. இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி, கெய்வாட் தலைமையிலான இந்தியா சி உடன் மோதியது.
இதில் முதலில் ஆடிய ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சி அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல் அவுட்டானது.
63 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஏ அணி 286 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ரியான் பராக் 73 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 53 ரன்னும் எடுத்தனர். இந்தியா சி சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா சி அணி களமிறங்கியது. அந்த அணியின் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில் இந்தியா சி அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ஏ அணி சார்பில் தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் எடுத்தனர்.
மற்றொரு போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் மோதின முதலில் ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 349 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் சதமடித்து 106 ரன் குவித்தார்.
இந்தியா பி தரப்பில் நவ்தீப் சைனி 5 விக்கெட்டும், ராகுல் சஹார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 116 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 87 ரன்கள் எடுத்தார்.
இந்தியா டி சார்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், ஆதித்யா தாக்கரே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிக்கி புல் 119 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அவுட்டானார்.
இதையடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணி 115 ரன்களில் சுருண்டது. இதனால் 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா டி அணி வெற்றி பெற்றது.
மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்ற இந்தியா ஏ அணி 2024 துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 2வது இடமும், அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணி மூன்றாம் இடமும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணி நான்காவது இடமும் பிடித்தன.
- துலீப் கோப்பை லீக் போட்டி ஆந்திராவின் அனந்தபூரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினர்.
அனந்தபூர்:
ஆந்திராவின் அனந்தபூரில், துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா பி, இந்தியா டி அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பி அணி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்தியா டி அணியின் தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், ரிக்கி புய் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 306 ரன் எடுத்திருந்தது. சாம்சன் 89 ரன்னும், சரண்ஷ் ஜெயின் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா பி சார்பில் ராகுல் சஹார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
மற்றொரு லீக் போட்டியில் இந்தியா ஏ, இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா சி அணி பவுலிங்'தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷஷ்வத் ராவத் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
ஷாம்ஸ் முலானி 44 ரன்கள் எடுத்தார்.
ஆட்டநேர முடிவில், இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்ததது. ஷஷ்வத் ராவத்122 ரன்னும், ஆவேஷ் கான் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சி சார்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும், விஜயகுமார் விஷாக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.
- இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்தியாவில் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து வந்த இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.
இதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணி 380 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 487 எனும் கடின இலக்கை துரத்திய இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்தியா டி அணிக்கு ரிக்கி புய் 113 ரன்களையும், அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 41 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு களமிறங்கியவர்களில் சௌரப் குமார் 22 ரன்களையும், ஹர்ஷித் ராணா 24 ரன்களையும் எடுத்தனர்.
இந்தியா ஏ அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய தனுஷ் கொடியன் 4 விக்கெட்டுகளையும், ஷாம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இந்தியா ஏ அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெங்களூரு:
துலீப் கோப்பை தொடர் சமீபத்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி 321 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் முஷீர் கான் சிறப்பாக ஆடி சதமடித்து 181 ரன்னும், நவ்தீப் சைனி 56 ரன்னும் எடுத்தஉள்ளனர்.
இந்தியா ஏ அணி சார்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும், ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஒருவரும் அரை சதம் அடிக்கவில்லை. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.
இந்தியா பி அணி சார்பில் முகேஷ் குமார், நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
90 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா பி அணி இரண்டாவது இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் கடந்து 61 ரன்னும், சர்ப்ராஸ் கான் 46 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா பி அணி சார்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 275 ரன்களை இலக்காகக் கொண்டு இந்தியா ஏ அணி களமிறங்கியது. அந்த அணி 198 ரன்களில் ஆல் அவுட்டானது. கே.எல்.ராகுல் 57 ரன்னும், ஆகாஷ் தீப் 43 ரன்னும் எடுத்தனர். இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணி அபார் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது முஷீர் கானுக்கு அளிக்கப்பட்டது.
- டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
- இந்தியா பி அணி முதல் நாள் முடிவில் 202 ரன்களை எடுத்தது.
பெங்களூரு:
துலிப் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே விளையாடி வருகின்றனர்.
செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் மோதினர். டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், அபிமன்யு களமிறங்கினர். அபிமன்யு 13 ரன், ஜெய்ஸ்வால் 30 ரன், சர்ப்ராஸ் கான் 9 ரன், ரிஷப் பண்ட் 7 ரன், சாய் கிஷோர் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய முஷீர் கான் சதம் விளாசி அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு முஷீர் கான், நவ்தீப் சைனி ஜோடி108 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் நாள் முடிவில் இந்தியா பி 79 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. முஷீர் கான் 105 ரன்னும், நவ்தீப் சைனி 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா ஏ அணி சார்பில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
- மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா ஏ அணி கைப்பற்றியது.
- குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஏ அணி, இந்திய ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பேட் செய்தது. 47 ஓவர்களில் 219 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணி 34 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 222 ரன்கள் அடித்ததுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் பிரித்வி ஷா 77 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 'ஏ' அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்