என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியா ஏ அணியை மிரட்டிய மனவ் சுதர்- 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
- டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் எடுத்தது.
லக்னோ:
இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இரு அணிகளிக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லக்னோவில் இன்று தொடங்கியது.
இந்தப்போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய 'ஏ' அணி கேப்டன் பதவியில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் திடீரென விலகினார். இதனால் துருவ் ஜூரல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்கள் குவித்தார்.
இந்திய தரப்பில் மனவ் சுதர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இவர் 2024-25 துலீப் டிராபியில் இந்தியா சி அணிக்காக விளையாடிய இவர், இந்தியா பி அணிக்கு எதிராக 82 ரன்கள் அடித்தார் மற்றும் ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியைப் பெற உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.






