என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ஏ அணி அபார வெற்றி
    X

    இந்தியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ஏ அணி அபார வெற்றி

    • துருவ் ஜூரெல் சதமடிக்க இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    பெங்களூரு:

    இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. துருவ் ஜூரெல் சதமடித்து 132 ரன்கள் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்க ஏ சார்பில் டியான் வான் வுரென் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து, முதல் இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் அக்கர்மேன் சதமடித்து 134 ரன்கள் விளாசினார்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    34 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா ஏ அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 382 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. துருவ் ஜூரெல் மீண்டும் சதமடித்து 127 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்க ஏ அணி அடித்து ஆடியது. ஜோர்டான் ஹெர்மான் 91 ரன்னும், செனோக்வானே, ஜுபைர் ஹம்சா தலா 77 ரன்னும், டெம்பா பவுமா 59 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா ஏ அணி 5 விக்கெட்டுக்கு 417 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

    Next Story
    ×