என் மலர்
நீங்கள் தேடியது "உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்"
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா நடத்தியது.
- இந்தப் போட்டியை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
புதுடெல்லி:
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுடெல்லியின் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றன. 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
மொத்தம் 186 பதக்கங்களுக்காக போட்டிகள் நடந்தன. இதில், சர்வதேச பாரா தடகள வீரர்கள், உலக சாம்பியன்கள் மற்றும் இந்திய விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், போட்டியை நடத்திய இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் நாடுகளை தொடர்ந்து உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
பதக்கப் பட்டியலில் பிரேசில் முதலிடமும், சீனா 2வது இடமும் பிடித்தன. இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி 400 மீட்டர் டி20 பிரிவில் கலந்து கொண்டார்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவு பந்தயத்தில் 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
இவரை தொடர்ந்து, துருக்கியின் அய்செல் ஒன்டர் 55.19 வினாடிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஈக்வடாரின் லிசான்ஷெலா அங்குலோ 56.68 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
முன்னதாக, இதற்காக தகுதி சுற்றின்போது தீப்தி ஜீவன்ஜி பெண்கள் 400 மீட்டர் டி20 ஹீட் பைனலுக்கு தகுதி பெற்றதன் மூலம் ஒரு புதிய ஆசிய சாதனையை 56.18 வினாடிகளில் எட்டி, 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸுக்கு தகுதி பெற்றார்.
தீப்தி ஜீவன்ஜி, கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் பெண்களுக்கான 400 மீ டி20 போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






