என் மலர்
நீங்கள் தேடியது "Deepthi Jeevanji"
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி 400 மீட்டர் டி20 பிரிவில் கலந்து கொண்டார்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவு பந்தயத்தில் 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
இவரை தொடர்ந்து, துருக்கியின் அய்செல் ஒன்டர் 55.19 வினாடிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஈக்வடாரின் லிசான்ஷெலா அங்குலோ 56.68 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
முன்னதாக, இதற்காக தகுதி சுற்றின்போது தீப்தி ஜீவன்ஜி பெண்கள் 400 மீட்டர் டி20 ஹீட் பைனலுக்கு தகுதி பெற்றதன் மூலம் ஒரு புதிய ஆசிய சாதனையை 56.18 வினாடிகளில் எட்டி, 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸுக்கு தகுதி பெற்றார்.
தீப்தி ஜீவன்ஜி, கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் பெண்களுக்கான 400 மீ டி20 போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது.
- திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் "பாராலிம்பிக்ஸ் 2024 ல் பெண்கள் 400 மீட்டர் டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். அவர் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார். அவருடைய திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை என பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில் "பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீ - டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். பல துன்பங்களை எதிர்கொண்டாலும் அவர் உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இன்னும் உயர்ந்த சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.






