என் மலர்
நீங்கள் தேடியது "ஓட்டம்"
- நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
- ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
தினமும் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
மன ஆரோக்கியம்
உங்கள் உடல் உங்களை மகிழ்ச்சியாக உணர உதவும் ரசாயனங்களை வெளியிடுகிறது.
ஆஸ்துமாவை விரட்டும்
ஆஸ்துமாவை நெருங்கவிடாமல் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய்களை வலுப்படுத்த உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும்
ஓடும்போது தமனிகள் சுருங்கி விரிவடைவதால் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்
நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.
உடல் எடை குறையும்
ஓடும்போது ஒரு மணி நேரத்திற்கு 705 முதல் 865 கலோரிகள் எரிக்கப்படும். உடல் எடையும் குறையும்.
உடல் வலிமை
ஓடுவதன் மூலம் உடல் வலிமை கூடுவதோடு தசை நாண்கள் மற்றும் தசைநார்கள் வலுப்படும்.
எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்
ஓடும் சமயத்தில் உடல் அழுத்தப்படும்போது எலும்புகளை வலுப்படுத்த அத்தியாவசிய தாதுக்களை அனுப்பும். ஓடுவதன் காரணமாக எலும்புகளை அழுத்துவதால், காலப்போக்கில் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.
மூட்டுகளை வலிமைப்படுத்தும்
ஓடுவதன் காரணமாக தசைநார்கள் மற்றும் தசைநாண் களின் வலிமையை அதிகரிப்பதன் மூலம் மூட்டு பகுதி வலிமை அடையும். அதனால் கணுக்கால், இடுப்பு மற்றும் முழங்கால்களில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
நீரிழிவு நோயை குறைக்கும்
ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
எவ்வளவு நேரம் ஓடலாம்?
தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் ஓடுவது நல்லது. அப்படி ஓட முடியாதவர்கள் 5 முதல் 10 நிமிடங்கள் ஓடுவது கூட உடல் உறுப்புகளுக்கு பலன் அளிக்கும்.
- புதுப்பெண் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார்
- கணவர் வெளிநாட்டில் ேவலை பார்க்கிறார்
திருச்சி:
சமயபுரம் அருகேயுள்ள சிறுகனூர் பகுதியில் 8 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். சிறுகனூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வர்ஷினி (வயது19). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பின்னர் வேலை நிமித்தமாக பெரியசாமி அரபு நாட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தாய் வீடு திரும்பிய வர்ஷினி வீட்டில் இருந்து மாயமானார். அவர் சங்கர் என்ற வாலிபருடன் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வர்ஷினியின் தாய் வினோதினி சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றார்.
- ஆசாமிகள் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது அப்பகுதியில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த 2 ஆசாமிகள் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம், தப்பி ஓடிய அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ரவி (வயது 52), மல்லேஷ் (60) ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
இதே போல ராயக்கோட்டை பகுதியில் போலீசாரைக்கண்டதும் லாட்டரி சீட்டுகளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்த அம்மா பூங்கா பகுதியை சேர்ந்த முத்து (45), கெலமங்கலம் பகுதியில் போலீசாரை கண்டதும் லாட்டரி சீட்டுகளை வீசிவிட்டு ஓட்டம் பிடித்த ஆஞ்சநேயர்கோவில் பகுதியை சேர்ந்த விஜி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிரா மம், எருமைக்காரன் வளவு பகுதியில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு சின்ன மாமனாருடன் பெண் ஓட்டம்.
- தகவல் அறிந்து வந்த சின்னம்மாள் முத்துசாமி மீது தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள கருக்கல்வாடி கிரா மம், எருமைக்காரன் வளவு பகுதியைசேர்ந்த பழனிசாமி முத்துசாமி (வயது 33) நெசவு தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அண்ணன் மருமகள் உறவு முறை கொண்ட சுரேஷ்குமாரின் மனைவி கோமதி (27) என்பவருடன் கள்ள தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10-ந்தேதி முத்துசாமியும், கோமதியும் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது, இதுபற்றி கோமதியின் மாமியார் சுந்தராம்பாள் பாணா புரத்தில் உள்ள கோமதியின் தாய் சின்னம்மாளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த சின்னம்மாள் முத்துசாமி மீது தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோமதிக்கு 2 குழந்தை கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2 குழந்தைகளை தவிக்க விட்டு அவர் ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுவர் ஏறி குதித்து ஓட்டம்
- வழக்கு பதிந்து தேடி வரும் போலீசார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் ஞானசுந்தர்(வயது 24). மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த மாதம் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மூலம் சிகிச்சைக்காக விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் ஞானசுந்தர் நேற்று முன்தினம் வேலா கருணை இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றுவிட்டாராம். இதுகுறித்து விடுதி காப்பாளர் கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 குழந்தைகளுடன் கணவர் தவிப்பு
- போலீசில் புகார்
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள செங்க–னம் பகுதியைச் சேர்ந்த–வர் கந் தன் மனைவி மங்கை–யர்க்க–ரசி (வயது 36) (இருவ–ரின் பெயர்களும் மாற்றப்பட் டுள்ளன). இந்த தம்பதிய–ருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்த நிலையில் மங்கை–யர்க்கரசிக்கு தைராய்டு பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு அவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வழக்கம் போல் கடந்த 24-ந்தேதி துறையூர் மருத்துவமனைக்கு செல்வதாக புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கணவர் கந்தன் மனைவியை பல் வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.
இருந்தபோதிலும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கி–டையே கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு மங்கை–யர்க்கரசி இதேபோன்று திடீரென மாயமாகி உள் ளார். பின்னர் 3 நாட்கள் கழித்து வீடு திரும்பினார். அதேபோன்று வீட்டிற்கு வந்து விடுவார் என கந்தன் எண்ணியிருந்தார்.ஆனால் தற்போது 15 நாட்களுக்கு மேல் ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் ஜம்புநாதபுரம் போலீசில் கந்தன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தினர். இதில் மாயமான மங்கையர்க்கரசி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரு–கேயுள்ள மீன்சுருட்டி பகுதியைச் சேர்ந்த வீரா (21) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருப்பது தெரிய–வந்தது.இதில் மீண்டும் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் சந்தே–கிக்கப்படுகிறது. மேலும் இருவரின் செல்போன்க–ளும் சுவிட்ச் ஆப் செய் யப்பட்டுள்ளதால் போலீ–சாருக்கு சந்தேகம் வலுத் துள்ளது. மூன்று குழந்தை–களின் தாயான 36 வயது பெண்மணி 21 வயது வாலி–பருடன் ஓட்டம் பிடித் துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப–டுத்தியுள்ளது.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் காதலனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்தார்
திருச்சி:
திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியை சேர்ந்த வாலிபருக்கு 25 வயதில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மனைவி தனது குழந்தைகளுடன் திடீரென்று மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் கணவர் தேடிபார்த்தும் எங்கும் காணவில்லை . இது குறித்து அந்த பெண்ணின் தாய் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் திருமணத்திற்கு முன்பு ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், தற்பொழுது அவருடன் மாயமாகிவிட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு குழந்தைகளின் தாய்,கணவனை தவிக்க விட்டு காதலுடன் ஒடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
- ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர்.
- காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்,
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பக நல அலுவலர் தனபாக்கியம், சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். சிறுமியை கடலூர் காப்பக அலுவலகத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தனது மகளை கண்டுப்பிடித்து தரக்கோரி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் பொதுமக்கள், உறவினர்கள் அவரை மீட்டனர். இதையடுத்து காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டு முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தற்போது சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்
பீளமேடு,
கோவை மாதா கோவில் வீதி சவுரிபாளையத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது தங்கை மகளின் கணவர் ஆண்டனி. பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.இதுகுறித்து பேசுவதற்கு விஜயலட்சுமி தனது மகனுடன் ஆண்டனி வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆன்டனி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியின் மகன் சவுந்தர்ராஜனை குத்த முயன்றார். அப்போது விஜயலட்சுமி தடுக்க முயன்றபோது அவரது வலது கையில் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த விஜயலட்சுமியை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விஜயலட்சுமி பீளமேடு போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆண்டனி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
- பாம்பைப்பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப் பாளையம் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது மேலும் இந்த பஸ் நிலையத்தில் வாரம் தோறும் புதன்கிழமை வாரசந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை என்பதால் கச்சிராய பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள் காய்கறி வாங்குவதற்காக அதிக அளவில் வார சந்தையில் கூடியிருந்தனர். வாரச் சந்தை நடக்கும் இடம் அருகே டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது
.இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் மதுபானம் வாங்குவதற்காக மதிப்பிரியர்கள் கடை முன்பு வரிசையில் நின்று கொண்டி ருந்தனர். அபோது மதுபான கடைக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளிய வந்தது. இதை பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மதுப் பிரியர்கள் ஓடுவதை பார்த்து விட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- கணவர் தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கி பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை மாவட்டம் வடக்கிபாளையம் அருகே உள்ள செல்லாண்டி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.
இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனை இளம் பெண்ணின் கணவர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
வேலை முடிந்ததும் மதியம் வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கி பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது
- விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. மாரத்தான் போட்டிகள் 3 பிரிவாக பிரித்து பள்ளி, பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ/மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளாக 5 கிலோ மீட்டர் தூரமும், திருநங்கைகள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்ட போட்டியும் நடத்தப்ப டவு ள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.1000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். இப்போ ட்டியில் கலந்துகொண்டு போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மாரத்தான் போட்டிகள் 01.05.2023 அன்று மாலை 3.30 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகில் தளபதி திடல் வளாகத்திலிருந்து தொடங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை எம்.ஜி.ஆர் உள்விளை யாட்டரங்கில் பதிவு மேற்கொள்ளலாம். இந்த மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ/மாணவி ய ர்கள், பொதுப்பிரிவினர்கள் மற்றும் திருநங்கைகள் பெரு மளவில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டியும் மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.






