search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl rescue"

    • இவர் அதே கிராமத்தில் உள்ள 14 வயது சிறுமியிடம் வீட்டின் வாசலை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேட்டுள்ளார்.
    • சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் முருகன் (வயது 48). கூலித் தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் உள்ள 14 வயது சிறுமியிடம் வீட்டின் வாசலை ஏன் சுத்தம் செய்யவில்லை என்று கேட்டுள்ளார். மேலும், வீட்டின் வாசலை சுத்தம் செய்வது எப்படி என்று கற்றுத் தருவதாக, சிறுமியை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தினார். சுதாரித்துக் கொண்ட சிறுமி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வீட்டிற்குள் சென்று சிறுமியை மீட்டனர். கூலித் தொழிலாளி முருகனை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஓப்படைத்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அது தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • வாலிபரை எச்சரித்து அனுப்பினர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 17-ந் தேதி மதரஸாபள்ளியில் உள்ள டியூஷனுக்கு சென் றார். இரவாகியும் மகள் வீட்டிற்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் டியூஷன் சென்டரில் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு சிறுமி வரவில்லை என்று தெரியவந்தது.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆந்திர மாநிலம், பலமநேரை சேர்ந்த ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரி யவந்தது.

    இதையடுத்து, போலீசார் இருவரையும் நேற்று பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

    இதில், இருவரும் காத லிப்பதாக தெரிவித்தனர். பெண்ணிற்கு திருமண வயது பூர்த்தியாகாத நிலை யில் போலீசார் சிறுமியை வேலூரில் உள்ள காப்பகத் தில் ஒப்படைத்தனர். சிறு மியை அழைத்து சென்ற வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர்.
    • காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பக நல அலுவலர் தனபாக்கியம், சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். சிறுமியை கடலூர் காப்பக அலுவலகத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தனது மகளை கண்டுப்பிடித்து தரக்கோரி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் பொதுமக்கள், உறவினர்கள் அவரை மீட்டனர். இதையடுத்து காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டு முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தற்போது சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகனூர் ரோட்டில் கொண்டி செட்டிபட்டி ஏரி உள்ளது .
    • இந்த ஏரியில் இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை அந்த பகுதியினர் பார்த்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே மோகனூர் ரோட்டில் கொண்டி செட்டிபட்டி ஏரி உள்ளது . இந்த ஏரியில் இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை அந்த பகுதியினர் பார்த்தனர் . இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் உடனே அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எந்த விவரமும் தெரியவில்லை.

    இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர் தவறி விழுந்தாரா? அல்லது யாராவது அடித்து போட்டார்களா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • பெற்றோர், ஊர் விவரம் தெரியவில்லை

    கலவை:

    கலவையை அடுத்த பாத்திக்காரன் பட்டி கிராமம் அருகே வழி தெரியாமல் சிறுமி தவித்துக்கொண்டிருந்தாள். பொது மக்கள் அளித்த தகவலின்பேரில் சிறுமியை திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மீட்டு வேலூர் அல்லாபுரம் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்ல காப்பகத்தில் ஒப்படைத் தார்.

    அந்த சிறுமி தனது பெயர் ரேணுகா என கூறினாள். ஆனால் பெற்றோர், ஊர் விவரம் தெரியவில்லை.

    • விழுப்புரம் ஆசிரமத்தில் ஒப்படைத்தனர்
    • பொதுமக்களை அடிப்பதாக புகார்

    வந்தவாசி:

    வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி வருவதாகவும் அப்பெண் பொதுமக்களை தகாத வார்த்தைகள் பேசியும், அடிக்கவும் செய்துள்ளார் என அப்பகுதி பொதுமக்கள் மூலம் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    பிறகு போலீசார் உடனே மீட்பு பணிகள் செய்து வரும் அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்து நேரடியாக சென்று பார்வையிட்ட‌ அறக்கட்டளையின் நிறுவனர் அசாருதீன் மற்றும் கேஷவராஜ் பெண்ணின் அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் அருகில் உள்ள ஆசிரமத்தில் ஒப்படைத்தனர்.

    • நடுவழியில் தவித்த சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    • எங்கே செல்வது என்று தெரியாமல் வேப்பூர் கூட்டு சாலையில் அழுது கொண்டு இருந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மேற்கு மாவட்டம் வேப்பூர் கூட்டு சாலையில் தனிமையில் அழுது கொண்டிருந்த 12 வயது சிறுமியை வேப்பூர் போலீஸ் ஏட்டு தென் எழிலன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திராவிடம் ஒப்படைத்தார். இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா சிறுமியிடம் விசாரணை செய்தபோது, சிறுமி திட்டக்குடி வட்டம் கல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிழக்கு தெருவில் வசித்து வரும் நல்லதம்பி -சங்கீதாவின் தம்பதி மகள் நவநீதா என்றும், அவர் மா.புடையூர் சந்ததோப்பு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார் என தெரிவித்தார். சிறுமியின் தந்தை நல்லதம்பி சென்னையில் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார் என்றும், சிறுமி நவநீதாவின் பாட்டி பவுனு என்பவர், தனது உறவுக்காரர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சிறுமியின் பாட்டி பவுனு, சிறுமியின் அத்தை உமா, மற்றும் சிறுமியின் தம்பி குரல்எழிலன் ஆகிய 3 பேரும் கல்லூர் கிராமத்திலிருந்து சென்னைக்கு சென்றுள்ளனர். இதனால் நானும் சென்னைக்கு வருகிறேன் என்று சிறுமி நவநீதா அழுதுள்ளதாகவும், நீ வர வேண்டாம் அம்மாவுடன் வீட்டில் இரு, என்று கூறிவிட்டு,  சென்றுவிட்டனர்.

    மேலும் சிறுமி நவநீதாவின் தாய் சங்கீதா மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுமி நவநீதா, தனது பாட்டியிடம் சென்னைக்கு செல்லும் எண்ணத்தில் கல்லூர் கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேப்பூர் கூட்டு சாலை வரையில் நடந்தே வந்ததாகவும் கூறியுள்ளார். பிறகு அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் வேப்பூர் கூட்டு சாலையில் அழுது கொண்டு இருந்துள்ளார். அப்போது வேப்பூர் காவல் நிலையத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தென்எழிலன் என்பவர் சிறுமி நவநீதாவை அழைத்து வந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திராவிடம் ஒப்படைத்துள்ளார்.

    சிறுமி மாயமாகி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கான்பெர்ரா:

    ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளத்தில் இருந்து கிளியோ சுமித் என்ற 4 வயது சிறுமி கடந்த மாதம் 16-ந் தேதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்து காணாமல் போனாள்.

    இந்த சிறுமியைத் தேடி பெரியதொரு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிறுமியை பற்றிய தகவல் தருவோருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5 கோடியே 62 லட்சம்) ரொக்கப்பரிசு வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

    இந்த நிலையில் ஒரு வீட்டில் சிறுமி பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலையில் அந்த பூட்டிய வீட்டை போலீசார் உடைத்தபோது அங்கு ஒரு அறையில் அந்த சிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அந்த சிறுமியை ஒரு போலீஸ் அதிகாரி தன் கைகளால் தூக்கி, ‘‘உன் பெயர் என்ன?’’ என்று கேட்டார். அதற்கு அவள் ‘‘கிளியோ’’ என்றாள்.

    அதைத்தொடர்ந்து அந்தச் சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டு, அவளது குடும்பத்துடன் உடனடியாக சேர்த்து வைக்கப்பட்டாள். காணாமல் போன தன் மகள் உயிருடன் மீட்கப்பட்டதில் அவளது தாய் பரவசம் அடைந்தார். இதுபற்றி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ‘‘எங்கள் குடும்பம் மீண்டும் முழுமையானது’’ என குறிப்பிட்டுள்ளார்.

    சிறுமி கடத்தப்பட்டதாக தெரிய வந்து, அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், சிறுமி கிளியோ மீட்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.

    இதுகுறித்து டுவிட்டரில் அவர் குறிப்பிட்டு, ‘‘அற்புதம், நிம்மதி அளிக்கும் செய்தி’’ என கூறி உள்ளார்.

    சிறுமி மாயமாகி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாமகிரிப்பேட்டையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது, தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமியை மீட்டனர்.
    நாமக்கல்:

    தொழிலாளர் உதவி ஆய்வாளர் சுதா தலைமையில் நாமகிரிப்பேட்டை பகுதியில் குழந்தை தொழிலாளர் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமி மீட்கப்பட்டார்.

    பின்னர் அந்த சிறுமியை கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கலெக்டர் அந்த சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இந்த கூட்டாய்வில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனிட் மற்றும் திட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இது போன்ற ஆய்வுகள் தொடரும் என்று தொழிலாளர் உதவி ஆய்வாளர் சுதா கூறினார்.
    கொத்தவால்சாவடியில் கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திய மர்ம பெண்ணை தேடி வருகின்றனர். #Girlrescue

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை சின்ன மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செல்வி. இவர்களது 4 வயது மகள் ஜெயலட்சுமி.

    இந்த தம்பதி சவுகார்பேட்டை ஆதியப்பன் தெருவில் தள்ளு வண்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் செல்வி தள்ளு வண்டியில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அங்கு சிறுமி ஜெயலட்சுமி விளையாடிக் கொண்டிருந்தாள்.

    திடீரென்று ஜெயலட்சுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி மகளை அப்பகுதியில் பல இடங்களில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கொத்தவால்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி ஜெயலட்சுமியை பெண் ஒருவர் கையை பிடித்து அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அப்பெண் சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திய மர்ம பெண்ணை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட சிறுமி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்ததும் அவளை ரெயில்வே போலீசார் மீட்டு தி.நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்ததும் தெரிய வந்தது. போலீசார் காப்பகத்துக்கு சென்று சிறுமியை அழைத்து வந்தனர்.

    சிறுமியை கடத்திய பெண் செங்குன்றத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அப்பெண்ணை பிடிக்க போலீசார் செங்குன்றத்துக்கு விரைந்துள்ளனர். சிறுமியை கடத்திய அவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீசாரை பார்த்ததும் அங்கேயே விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. #Girlrescue

    குடும்ப பிரச்சனை காரணமாக திருப்பதி மலை பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் மீட்டனர்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜக்கியா பேட்டையை சேர்ந்தவர் நீரா கல்யாண்.

    குடும்பப் பிரச்னை காரணமாக நேற்று காலை 10 மணிக்கு அவர், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக செல்பி வீடியோ மூலம் போலீசாருக்கு தகவல் அனுப்பி பின்னர் மாயமாகி விட்டார்.

    செல்பி வீடியோவை ஆய்வு செய்த போலீசார் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வழியில் நடைபாதை அருகே உள்ள அவாச்சாரி கோனை பள்ளத்தாக்கில் அவர் தற்கொலைக்கு முயன்றதை அறிந்து அங்கு தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் இளம்பெண்ணை தேடினர்.

    5 மணி நேரம் தீவிர தேடலுக்குப் பின்னர் பள்ளத்தாக்கில் 60 அடி ஆழம் உள்ள இடத்தில் காயங்களுடன் நீராகல்யாணி மயங்கிக்கிடந்தார். மரங்களில் சிக்கியதால் அவர் உயிர் பிழைத்தார்.

    அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஒடிசா மாநிலம் சோனே பூர் மாவட்டம் அருகே கிணற்றில் விழுந்த தனது தங்கையை துணிச்சலுடன் காப்பாற்றிய 9 வயது சிறுமி சாயா கான்டிக்கு கலெக்டர் தலைமையில் பாராட்டுவிழா நடத்தது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் சோனே பூர் மாவட்டத்தில் தாராபா பகுதியில் உள்ள கெந்துமுன்டா கிராமத்தை சேர்ந்தவள் சாயாகான்டி பாக் (9). அங்குள்ள ஒரு பள்ளியில் 4-வது வகுப்பு படிக்கிறார்.

    இவள் தனது 2 வயது தங்கை மிலியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக மிலி அருகேயுள்ள 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து விட்டாள்.

    அதைப் பார்த்த சாயா கான்டி உடன் விளையாடிய சிறுமிகளிடம் இத்தகவலை தனது பெற்றோரிடமும், கிராம மக்களிடமும் கூறி அவர்களை இங்கு அழைத்து வரும்படி கூறினாள்.

    பின்னர் யாரும் எதிர்பாராத நிலையில் தனது தங்கையை காப்பாற்ற துணிச்சலாக கிணற்றில் குதித்தாள். அப்போது தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்த தங்கையை கஷ்டப்பட்டு மீட்டுக் கொண்டிருந்தாள்.

    இதற்கிடையே அங்கு வந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கயிறு மூலம் சாயாகான்டி மற்றும் அவரது தங்கை மிலி ஆகியோரை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    சாயாகான்டியின் வீரம் மிக்க இச்செயல் காட்டுத் தீயாக பரவியது. எனவே சோனேபூர் மாவட்ட நிர்வாகம் சிறுமி சாயா கான்டிக்கு கலெக்டர் தாசரதி சதாபதி தலைமையில் பாராட்டுவிழா நடத்தினர்.

    மேலும் சாயாகான்டிக்கு தேசிய வீர தீர விருதுக்கு பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் கல்விக்கு உதவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    தாராபா பகுதியில் இயங்கும் யாதவ் சமாஜ் என்ற சமூக சேவை நிறுவனம் சிறுமி சாயாகான்டிக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவப்படுத்தியது. மகளின் துணிச்சலான செயல் தன்னையும் கிராமத்தையும் பெருமை படுத்தியுள்ளதாக அவளது தந்தை லட்சுமி சரண்பாக் தெரிவித்துள்ளார். #tamilnews
    ×