search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "run"

    • கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது.
    • போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 12-வது சென்னை மாரத்தான் இன்று நடந்தது. சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனம் ஆதரவுடன் இந்த போட்டி நடந்தது. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.

    முழு மாரத்தான் பந்தயம் மெரீனா கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலத்தில் தொடங்கியது. கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது. பெர்பெக்ட் மைலர், 10 கிலோ மீட்டர் ஆகியவையும் நேப்பியர் பாலத்தில் இருந்துதொடங்கியது. அரை மாரத்தான் போட்டி எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இருந்து தொடங்கியது.

    4 பிரிவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
    • மாரத்தான் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி , வானொலி திடலில் முடிவடைந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நல துறை சார்பில் நடந்த பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

    சமூகநல அலுவலர் ரவிபாலா தலைமையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி , வானொலி திடலில் முடிவடைந்தது. இதில் 100க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஓடினர்.

    தொடர் விடுமுறை நாள்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    கோவை,

    தொடர் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக கோவையில் இருந்து 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்தின் சார்பாக வார இறுதி நாள்களான நாளை (12-ந் தேதி), மற்றும் ஞாயிறு (13-ந் தேதி), சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி ஆகிய தொடர் விடுமுறை நாள்களை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு சென்று மீண்டும் ஊர் திரும்பும் விதமாக ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் கூடுத லாக 50 சிறப்பு பஸ்கள் வருகிற இன்று முதல் இயக்கப்பட உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    • ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில்(எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
    • மங்களூர்- சென்னை சிறப்பு ரெயில்(எண்.06042) மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை சென்றடையும்.

    கோவை,

    கோவை- போத்தனூர் வழித்தடங்களில் 3 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆகஸ்ட் 24-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம்-சென்னை சிறப்பு ரெயில்(எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

    ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரெயில்(எண்.06045) மறுநாள் காலை 3 மணிக்கு எர்ணாகுளத்தைச் சென்றடையும்.

    இந்த ரெயிலானது, ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 5ந் தேதி வரை தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் தாம்பரம்-மங்களூர் சிறப்பு ரெயில்(எண்.06041) மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

    ஆகஸ்ட் 23ந் தேதி முதல் செப்டம்பர் 6ந் தேதி வரை, மங்களூரில் இருந்து புதன்கிழமைகளில் காலை 10 மணிக்குப் புறப்படும் மங்களூர்- சென்னை சிறப்பு ரெயில்(எண்.06042) மறுநாள் காலை 4.45 மணிக்கு சென்னை சென்றடையும்.

    இந்த ரெயிலானது, காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், குட்டிபுரம், ஷொரனூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 5ந் தேதி வரை, செவ்வாய்க்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 6.05 மணிக்குப் புறப்படும் கொச்சுவேலி-பெங்களூர் சிறப்பு ரெயில்(எண்.06083) மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.

    ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 6ந் தேதி வரை புதன்கிழமைகளில் நண்பகல் 12.45 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூர்-கொச்சுவேலி சிறப்பு ரெயில்(எண்.06084) மறுநாள் காலை 6 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

    இந்த ரெயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, சங்கனச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    • கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள ராமசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 8 வயதில் மகள், 5 வயதில் மகன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார்.

    அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அவர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    பின்னர் அவர் பேரூர் போலீஸ் நிலையத்தில் தன்னை தவிக்க விட்டு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர்.
    • காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 15 வயது மகளும், அதே ஊரை சேர்ந்த ஞானகுரு (வயது 18) காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பக நல அலுவலர் தனபாக்கியம், சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். சிறுமியை கடலூர் காப்பக அலுவலகத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் முன்பு தனது மகளை கண்டுப்பிடித்து தரக்கோரி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது அங்கு இருந்த போலீசார் பொதுமக்கள், உறவினர்கள் அவரை மீட்டனர். இதையடுத்து காதல் ஜோடியை தீவிரமாக தேடிய போலீசார், காதலனிடம் இருந்து சிறுமியை மீட்டு முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தற்போது சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முன்னாள் காதலனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்தார்

    திருச்சி:

    திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியை சேர்ந்த வாலிபருக்கு 25 வயதில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மனைவி தனது குழந்தைகளுடன் திடீரென்று மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் கணவர் தேடிபார்த்தும் எங்கும் காணவில்லை . இது குறித்து அந்த பெண்ணின் தாய் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண் திருமணத்திற்கு முன்பு ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், தற்பொழுது அவருடன் மாயமாகிவிட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு குழந்தைகளின் தாய்,கணவனை தவிக்க விட்டு காதலுடன் ஒடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.





    • நாமக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75- வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் 6.8.2022 தொடங்கி 12.8.2022 வரை நடைபெற்று வருகின்றது.
    • அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75- வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் 6.8.2022 தொடங்கி 12.8.2022 வரை நடைபெற்று வருகின்றது.

    அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவிகள் மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. நாமக்கல் நகராட்சி குளக்கரைத்திடலில் அமுதப்பெருவிழா மற்றும் அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சி முகாமில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினிமராத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா, நாமக்கல் நகராட்சித்தலைவர் கலாநிதி முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். இந்த பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் நாமக்கல் உழவர் சந்தை, ஆஞ்சிநேயர் கோவில், சேலம் ரோடு, திருச்செங்கோடு சாலை, நாமக்கல் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் குளக்கரைத்திடல் வந்தடைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பால்கிரேஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அம்பிகா உள்பட கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டு சாத்தான்குளத்துக்கு 5 மணிக்கு வந்து சேரும்.
    • பஸ் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக குட்டத்துக்கு அரசு பஸ் தடம் எண் 173 ஜி இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் அதிகாலை நெல்லையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டு சாத்தான்குளத்துக்கு 5 மணிக்கு வந்து சேரும். வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முறையாக இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த பஸ்சை நம்பி வெளியூர்களில் இருந்து அதிகாலை வரும் வியாபாரிகள், கொள் முதல் செய்ய செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்த பஸ் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    இந்த பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள், வியா பாரிகள் பெரிதும் பாதிக்க ப்படுகின்றனர். ஆதலால் போக்கு வரத்து துறை அதிகாரிகள் இதனை கவனித்து தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.
    • அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதனை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர்.

    அதன்படி வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி உப்புசத்திய கிரக

    நினைவு ஸ்தூபியில் ஒலிம்பியாட் ஜோதியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார். கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் வரவேற்றார்.

    இந்த ஜோதி ஓட்டமானது சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் தொடங்கி தலைஞாயிறு, கீவளுர், வேளாங்கண்ணி வழியாக நாகை சென்றடைகிறது. தலைஞாயிறுக்கு வந்தபோது பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா ,நகரமன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, நகர மன்ற ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹீம், தாசில்தார் ரவிச்சந்திரன்ரூ, பேராட்சி மன்றத் தலைவர் செந்தமிழ்செல்வி, துணைத்தலைவர் கதிரவன் , செஸ் விளையாட்டு வீரர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் , வணிகர்கள், சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • இரவில் பெண்களை புற வழிசாலையில் இறக்கி விடுவதால் டாஸ்மாக் கடையை கடந்து 1.5 கி.மீ. தூரம் தனியே நடந்து ஊருக்குள் வர வேண்டும்.
    • இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும் நேரம் காப்பாளர் நியமிக்க வேண்டும்.

    சேலம்:

    மல்லூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர், அரசு போக்குவரத்து அலுவலர் , தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது . இந்த கூட்டத்தில் ஊரக டி.எஸ்.பி. தையல் நாயகி பேசியதாவது-

    அனைத்து பஸ்களையும் மல்லூர் வழியாக இயக்க வேண்டும், இரவில் பெண்களை புற வழிசாலையில் இறக்கி விடுவதால் டாஸ்மாக் கடையை கடந்து 1.5 கி.மீ. தூரம் தனியே நடந்து ஊருக்குள் வர வேண்டும், இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளது. டிரைவர், கண்டக்டர்கள் பெண்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும், அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு காமிரா பெருத்த வேண்டும் என்றார்.

    சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர் பேசுகையில், மல்லூர் பஸ் டாப்பில் பஸ் பெயர், மல்லூர் வந்து செல்லும் நேரம் ஆகியவை அடங்கிய கால அட்டவனை வைக்க வேண்டும், நேர காப்பாளர் நியமிக்க வேண்டும், மல்லூர் ஊருக்குள் வரும் பஸ்களின் க ண்டக்டர்கள் அங்குள்ள நோட்டில் கையெழுத்திட வேண்டும் என்றார். அப்போது டவுன் பஞ்சாயத்து துணை தலைவர் வேங்கை எம். அய்யனார், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் கலை வாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, மற்றும் தனியார் பஸ் உரிமை யாளர்கள் சங்கத்தினர் உள்பட ப லர் பங்கேற்றனர்.

    • ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.
    • அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இந்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடு ஞ்சாலையில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலை ப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

    இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் இந்த வழியாக 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.

    நேற்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விரைவில் அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பபடும் என தெரிவித்தனர்.

    ×