நாமக்கல் அருகே ஏரியில் விழுந்த பெண் மீட்பு

மோகனூர் ரோட்டில் கொண்டி செட்டிபட்டி ஏரி உள்ளது . இந்த ஏரியில் இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை அந்த பகுதியினர் பார்த்தனர்.
நாமக்கல் அருகே ஏரியில் விழுந்த பெண் மீட்பு
Published on

நாமக்கல்:

நாமக்கல் அருகே மோகனூர் ரோட்டில் கொண்டி செட்டிபட்டி ஏரி உள்ளது . இந்த ஏரியில் இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை அந்த பகுதியினர் பார்த்தனர் . இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உடனே அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எந்த விவரமும் தெரியவில்லை.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர் தவறி விழுந்தாரா? அல்லது யாராவது அடித்து போட்டார்களா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com