search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
    X

     தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு வென்ற சென்னை எஸ்.ஆர்.எம் அணிக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கோப்பை வழங்கினார்‌.

    எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்

    • கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி விளையாட்டு குழு சார்பில் தேசிய அளவிலான 5.ஏ.சைட் எனப்படும் ஹாக்கி போட்டி நடந்தது.
    • ஊசுடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி சீறுடை வழங்கி போட்டியை துவக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி விளையாட்டு குழு சார்பில் தேசிய அளவிலான 5.ஏ.சைட் எனப்படும் ஹாக்கி போட்டி நடந்தது.

    ஊசுடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் தேசியக் கொடியேற்றி சீறுடை வழங்கி போட்டியை துவக்கி வைத்தார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் பாபு, கே.எம்.பி லோகையன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்தப் போட்டியில் புதுவை, பூணே, கொச்சின், சென்னை எஸ்.ஆர்.எம்அணி கொல்கத்தா, மதுரை, தர்மபுரி, ஊட்டி ஆகிய பகுதியிலிருந்து 24 அணிகள் பங்கேற்றது. 2 நாட்கள் நடந்த போட்டியில் முதல் பரிசை சென்னை எஸ்.ஆர்.எம் அணி பெற்றது.

    முதல் பரிசு வென்ற எஸ்.ஆர்.எம் அணிக்கு அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் ரூபாய் 20 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கோப்பை வழங்கி பாராட்டினார்.

    இந்த அணிக்கான சுடர் கேடையத்தை ஏ.டி.எஸ் தாமோதரன் வழங்கினார். இரண்டாம் பரிசை தர்மபுரி பாலக்கோடு அணி வென்றது. இந்த அணிக்கு பாஜக மாநில செயலாளர் ஜெயக்குமார் ரெட்டியார் ரூ. 15,000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். மனிதநேய மக்கள் சேவை இயக்க இளைஞர் அணி தலைவர் விநாயகம் இந்த அணிக்கு சுழற் கேடயத்தை வழங்கினார்.

    3-ம் பரிசு வென்ற புதுச்சேரி ஜெம்ஸ் ஹாக்கி கிளப் பணிக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகையுடன் கோப்பையை அய்யனார் வழங்கினார் அதற்கான சுழற் கேடயத்தை திவாகர் மேனன் வழங்கினார். இந்த போட்டியில் நான்காம் பரிசு வென்ற அர்ஜுனா ஹாக்கி கிளப் கூடப்பாக்கம் அணியினருக்கு ரூபாய் 5000 ரொக்க பரிசினை ராம.சிவராஜன் வழங்கினார்.

    இந்த அணிக்கு சுழற் கேடயத்தை பிரபாகரன் வழங்கினார். இவ்விழாவில் லே பாண்டிச்சேரி ஹாக்கி சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் அன்பழகன், முன்னாள் தலைவர் ராஜசேகர், ஓஎன்ஜிசி முன்னாள் செயலர் பழனி, செந்தில் மற்றும் காக்கிசங்க நிர்வாகிகள் பங்கு பெற்றனர் பரிசிறப்பு விழாவில் அர்ஜுனாகி கிளப் தலைவர் ராமு நன்றி கூறினார். தொடர் நாயகன் விருதை எஸ்.ஆர்.எம். அணியின் வீரர் அகிலனுக்கும், தொடரில் சிறந்த தடுப்பு ஆட்டக்காரராக அர்ஜுனா ஹாக்கி கிளப்பை சேர்ந்த அருணாச்சலத்துக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடப்பாக்கம் அர்ஜுனா ஹாக்கி கிளப் நிர்வாகிகள் பச்சையப்பன் கருணாகரன் சதீஷ் உலக பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×