மதுரை அணி சாம்பியன்

மதுரை அணி சாம்பியன் பெற்றது. பயிற்சியாளர் சுந்தரராஜாவை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.
மதுரை அணி சாம்பியன்
Published on

மதுரை

மதுரை திருநகர் விளையாட்டு மைதானத்தில் தென்மாவட்ட அளவிலான 15 வயதிற்குட்பட்டோர் ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. தென்மாவட்டங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன.

இதில் கால் இறுதி போட்டியில் திண்டுக்கல் எச்.எப்.ஏ. அணியையும், அரை இறுதி போட்டியில் அக்மே அரினா அணியையும் வென்று மதுரை ஆர்.எல்.எப்.ஏ. அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதி போட்டியில் அக்மே எப்.ஏ.ஏ. அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று மதுரை ஆர்.எல்.எப்.ஏ. அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சுந்தரராஜாவை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com