search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜேப்பியார் அணி சாம்பியன்
    X

    மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற ஜேப்பியார் அணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், ஜான்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கோப்பை வழங்கிய காட்சி.

    ஜேப்பியார் அணி சாம்பியன்

    • புதுவை கால்பந்து சங்கம் 2022-23 ஆண்டிற்கான லீக் சாம்பியன்ஷிப் போட்டி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வரை நடைபெற்றது.
    • இதில் ஜேப்பியார் அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்று கோப்பை வென்றது. 2-வது இடத்தை குப்புராஜ் அணியும், ஈகல்ஸ் அணி 3-வது இடத்தையும் பிடித்தது.

    புதுச்சேரி:

    புதுவை கால்பந்து சங்கம் 2022-23 ஆண்டிற்கான லீக் சாம்பியன்ஷிப் போட்டி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி வரை நடைபெற்றது.

    போட்டியில் ஆண்கள் பிரிவில் மொத்தம் 34 அணிகள் பங்கேற்றன. இதில் 14 பேர் ஏ பிரிவு அணிகளாகவும, மற்றும் 20 பேர் பி பிரிவு அணிகளாகவும் பிரிக்கப்பட்டு விளையாடி வந்தனர்.

    இதற்கான ஏ பிரிவு இறுதி போட்டியில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் அணியும், குப்புராஜ் விளையாட்டு கழகமும் விளையாடியது. இதில் ஜேப்பியார் அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்று கோப்பை வென்றது. 2-வது இடத்தை குப்புராஜ் அணியும், ஈகல்ஸ் அணி 3-வது இடத்தையும் பிடித்தது.

    பி பிரிவில் அர்சினல் விளையாட்டு கழகம் முதலிடமும், 2-வது இடத்தில் ஆல்வார் விளையாட்டு கழகம் 3-வது இடத்தை சிட்டி-5 அணி பிடித்தது. இதன் மூலம் பி பிரிவில் வென்ற 3 அணிகளும் ஏ பிரிவுக்கு தகுதியாகியுள்ளது. மகளிருக்கான போட்டியில் 6அணிகள் மோதின. இதில் செல்டிக் குயின்ஸ் முதலிடமும், ஐ.ஜி.ஏ.எஸ்.இ. 2-வது இடத்தையும், அண்ணா அணி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    சப்- ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன. இதில் ஜேப்பியார் அணி முதலிடமும், கிருஷ்ணன் மெமோரியல் அணி 2-வது இடமும் பிடித்தது. இதற்கான பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    புதுவை கால்பந்து கழக சேர்மன் ஜான்குமார்

    எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் விவிலியன் ரிச்சர்ட்ஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சங்க தலைவர் நெஸ்டர், செயலாளர் தனசேகர், துணைத் தலைவர்கள் ராஜேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, துணைச்செயலாளர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமரன், கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், வினோத்குமார், முனியாண்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×