search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் கையுந்து பந்து போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன்
    X

    பெண்கள் கையுந்து பந்து போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன்

    • பெண்கள் கையுந்து பந்து போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டம் பெற்றது
    • கையுந்து பந்து போட்டியில் 18 கல்லூரி அணிகள் கலந்துகொண்டது

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் கையுந்து பந்து போட்டி திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியினை புதுக்கோட்டை மேலசிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தியது.இதில் திருச்சி, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுகை, பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையான கல்லூரி அணிகள் பங்கேற்றன.18 கல்லூரி அணிகள் கலந்துகொண்ட கையுந்து பந்து போட்டியில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, கரூர் அரசு கல்லூரியை 25-13, 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவிகளுக்கான வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றது.மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 25-13, 22-25, 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.வெற்றி பெற்ற வீராங்கனைகளை ஜமால் முகமது கல்லூரியின் செயலரும், தாளாளருமான ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால் முஹம்மது, உதவிச்செயலர் கே.அப்துஸ் சமது, கௌரவ உறுப்பினர் முனைவர் கே.என்.அப்துல்காதர் நிஹால் முதல்வர் முனைவர் கே.என்.முகமது பாசில் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் பி.எஸ்.ஷாஇன்ஷா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    Next Story
    ×