என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coco Gauf"

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே உக்ரைன் வீராங்கனை சிறப்பாக ஆடினார். இதனால் எலினா ஸ்விடோலினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள கோகோ காப் நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் கோகோ காப் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் ரிபாகினா, அமெரிக்காவின் கேட் மெக்னல் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ரஷியாவின் கமீலா ராக்கிமோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்று போட்டி நடந்தது.
    • இதில் அமெரிக்கா வீராங்கனை கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், செக் குடியரசின் கரோலினா முசோவாவை எதிர்கொண்டார்.

    ஆரம்பம் முதலே கோகோ காப் சிறப்பாக ஆடினார். இறுதியில், கோகோ காப் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, போலந்து வீராங்கனை மேக்டலெனா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் மேக்டா லினெட் உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-0, 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் கோகோ காப், சபலென்காவை எதிர்கொள்கிறார்.

    ×