search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "China Open"

    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறினார். #ChinaOpen
    புஜோவ்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 14-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் ஷோ டியான் சென்னிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #ChinaOpen
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி முதல் சுற்றில் பிரான்ஸின் லூகாஸ் கார்வீயை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-12, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதில் இந்தோனேசியாவின் டாமி சுகியார்ட்டோவை எதிர்கொள்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் பிரணோய் 11-21, 14-21 என இந்தோனேசிய வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இளம் வீராங்கனையான வைஷ்ணவி ரெட்டியும் தோல்வியடைந்தார்.
    பீஜிங்கில் நடந்து வரும் சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா, கெர்பர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர். #ChinaOpen2018 #Kerber #Osaka
    பீஜிங்:

    மொத்தம் ரூ.60 கோடி பரிசுத்தொகைக்கான சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் மகுடம் சூடும் வீராங்கனை ரூ.11 கோடியை பரிசாக அள்ளுவார். நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சீனாவின் வாங் குயாங், முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் (லாத்வியா) மோதினார். இடதுகையில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்டாபென்கோ தடுமாற, அதை சாதகமாக பயன்படுத்தி வாங் குயாங் அமர்க்களப்படுத்தினார். அவர் எதிராளிக்கு ஒரு புள்ளி கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 55 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

    விம்பிள்டன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தன்னை எதிர்த்த கார்லா சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) 7-6 (4), 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), சிபுல்கோவா (சுலோவக்கியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜப்பான் இளம் புயல் நவோமி ஒசாகா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் டேனியலி கோலின்சை (அமெரிக்கா) 53 நிமிடங்களில் பந்தாடினார். அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் மூலம் ஒசாகா, சிங்கப்பூரில் வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 3-வது வீராங்கனையாக தகுதி பெற்றார். ஏற்கனவே சிமோனா ஹாலெப் (ருமேனியா), கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் இந்த கவுரவமிக்க போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். 
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் கெம்கியை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். #ChinaOpen2018 #KidambiSrikanth
    சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தும், டென்மார்க் நாட்டை சேர்ந்த ராஸ்மஸ் கெம்கியும் இன்று மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து, 21-9 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார்.

    இதையடுத்து இரண்டாவது சுற்றில் டென்மார்க் வீரர் கெம்கி கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனால் கிடாம்பி ஸ்ரீகாந்த் பொறுப்புடன் விளையாடி 21-19 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், 21-9, 21-19 என்ற நேர் செட்களில் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.  

    மற்றொரு போட்டியில், இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ஹாங் காங் வீரர் லாங் அங்கசிடம் 21-16, 21-12 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். #ChinaOpen2018 #KidambiSrikanth
    ×