search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Osaka"

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, ஸ்பெயின் வீராங்கனை சோரிப்ஸ் டோர்மோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். #NaomiOsaka #MadridOpen
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 7-6 (7-5), 3-6, 6-0 என்ற செட் கணக்கில் ஸ்பெயினை சேர்ந்த வைல்டு கார்டு வாய்ப்பு பெற்ற வீராங்கனை சோரிப்ஸ் டோர்மோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 7-5, 6-1 என்ற நேர்செட்டில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.#NaomiOsaka #MadridOpen 
    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர். #IndianWellsTennis #Djokovic #Osaka
    இன்டியன்வெல்ஸ்:

    இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா), 39-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரீபரை சந்தித்தார்.

    மழையால் பாதிக்கப்பட்டு மறுநாளில் தொடர்ந்த இந்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஜோகோவிச் 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிலிப் கோல்ஸ்கிரீபரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ஜோகோவிச்சிடம் தொடர்ச்சியாக 11 முறை தோல்வி கண்ட கோல்ஸ்கிரீபர் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார். பின்னர் கோல்ஸ்கிரீபர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை எனது பயிற்சியாளருடன் இணைந்து கொண்டாடுவேன். எனக்கு நிறைய வாழ்த்து செய்திகள் வந்து இருக்கின்றன’ என்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் 26-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் ஸ்வார்ட்ஸ்மானை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். ஜப்பான் வீரர் நிஷிகோரி, குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 3-6, 1-6 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சிடம் (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு நவோமி ஒசாகா சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடர்ச்சியாக 11-வது வெற்றியை ருசித்த பெலின்டா பென்சிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் செக்குடியரசு வீராங்கனை மார்கெடா வோன்ட்ரோசோவாவிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர். #IndianWellsTennis #Djokovic #Osaka
    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை தோற்கடித்தார். #WTAFinal #Singapore #SloaneStephen #NaomiOsaka
    சிங்கப்பூர்:

    மொத்தம் ரூ.51 கோடி பரிசுத்தொகைக்கான பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் அவர்கள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தினார்.  #WTAFinal #Singapore #SloaneStephen #NaomiOsaka
    பீஜிங்கில் நடந்து வரும் சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா, கெர்பர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர். #ChinaOpen2018 #Kerber #Osaka
    பீஜிங்:

    மொத்தம் ரூ.60 கோடி பரிசுத்தொகைக்கான சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் மகுடம் சூடும் வீராங்கனை ரூ.11 கோடியை பரிசாக அள்ளுவார். நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சீனாவின் வாங் குயாங், முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் (லாத்வியா) மோதினார். இடதுகையில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்டாபென்கோ தடுமாற, அதை சாதகமாக பயன்படுத்தி வாங் குயாங் அமர்க்களப்படுத்தினார். அவர் எதிராளிக்கு ஒரு புள்ளி கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 55 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

    விம்பிள்டன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தன்னை எதிர்த்த கார்லா சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) 7-6 (4), 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), சிபுல்கோவா (சுலோவக்கியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜப்பான் இளம் புயல் நவோமி ஒசாகா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் டேனியலி கோலின்சை (அமெரிக்கா) 53 நிமிடங்களில் பந்தாடினார். அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் மூலம் ஒசாகா, சிங்கப்பூரில் வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 3-வது வீராங்கனையாக தகுதி பெற்றார். ஏற்கனவே சிமோனா ஹாலெப் (ருமேனியா), கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் இந்த கவுரவமிக்க போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள். 
    ×