என் மலர்

  நீங்கள் தேடியது "beats"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை தோற்கடித்தார். #WTAFinal #Singapore #SloaneStephen #NaomiOsaka
  சிங்கப்பூர்:

  மொத்தம் ரூ.51 கோடி பரிசுத்தொகைக்கான பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் அவர்கள் ‘ரெட்’, ‘ஒயிட்’ என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

  இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தினார்.  #WTAFinal #Singapore #SloaneStephen #NaomiOsaka
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் டொமினிக் திம், மேடிசன் கீஸ் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். #FrenchOpen2018 #DominicThiem
  பாரீஸ்:

  பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதியில் 3-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), தரநிலையில் 8-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதினர்.

  ஆக்ரோஷமான ஷாட்டுகள் மூலம் தொடக்கத்தில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய டொமினிக் திம் அடுத்தடுத்து செட்டுகளை தனதாக்கி அசத்தினார். ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஸ்வெரேவ், எதிர்ப்பின்றி பணிந்து போனார். டொமினிக் திம் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

  பின்னர் டொமினிக் திம் கூறுகையில், ‘பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டியிருப்பது வியப்பளிக்கிறது. எனது இளம் வயதில் இந்த மாதிரியான நிலையை அடைவேன் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. இந்த ஆண்டில் மேலும் ஒரு படி முன்னேற வேண்டும்’ என்றார்.

  முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் குரோஷிய வீரர் மரின் சிலிச் 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் போக்னினியை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற சிலிச் 3 மணி 37 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.  பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீரர் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தரவரிசையில் 98-வது இடத்தில் உள்ள யுலியா புதின்ட்செவாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார். 1 மணி 24 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து, அரைஇறுதிக்கு முன்னேறினார். இதுவரை எந்த செட்டையும் இழக்காத 23 வயதான மேடிசன் கீஸ் பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

  மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கசட்கினாவை விரட்டியடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

  ஸ்டீபன்ஸ் அரைஇறுதியில் சக நாட்டவர் மேடிசன் கீஸ்சுடன் மோத உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிஆட்டத்தில் சந்தித்து அதில் ஸ்டீபன்ஸ் வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது.  #FrenchOpen2018 #DominicThiem  #tamilnews 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #MadridOpen #NovakDjokovic
  மாட்ரிட்:

  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 3-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 7-5, 6-3 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ்சை தோற்கடித்தார்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீபென்ஸ்சை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 2-6, 2-6 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீராங்கனை பெர்டென்ஸ்சிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து நடையை கட்டினார்.  #MadridOpen #NovakDjokovic 
  ×