என் மலர்

  செய்திகள்

  இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் - 3வது சுற்றில் ஜோகோவிச், ஒசாகா தோல்வி
  X

  இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் - 3வது சுற்றில் ஜோகோவிச், ஒசாகா தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர். #IndianWellsTennis #Djokovic #Osaka
  இன்டியன்வெல்ஸ்:

  இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா), 39-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரீபரை சந்தித்தார்.

  மழையால் பாதிக்கப்பட்டு மறுநாளில் தொடர்ந்த இந்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஜோகோவிச் 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிலிப் கோல்ஸ்கிரீபரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ஜோகோவிச்சிடம் தொடர்ச்சியாக 11 முறை தோல்வி கண்ட கோல்ஸ்கிரீபர் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார். பின்னர் கோல்ஸ்கிரீபர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை எனது பயிற்சியாளருடன் இணைந்து கொண்டாடுவேன். எனக்கு நிறைய வாழ்த்து செய்திகள் வந்து இருக்கின்றன’ என்றார்.

  மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் 26-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் ஸ்வார்ட்ஸ்மானை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். ஜப்பான் வீரர் நிஷிகோரி, குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 3-6, 1-6 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சிடம் (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு நவோமி ஒசாகா சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடர்ச்சியாக 11-வது வெற்றியை ருசித்த பெலின்டா பென்சிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

  மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் செக்குடியரசு வீராங்கனை மார்கெடா வோன்ட்ரோசோவாவிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தனர். #IndianWellsTennis #Djokovic #Osaka
  Next Story
  ×