search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kidambi Srikanth"

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.
    • முதல் செட்டை ஸ்ரீகாந்த் 12- 21 என்ற கணக்கில் மோசமாக தோற்றார்.

    மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.

    முதல் செட்டை ஸ்ரீகாந்த் 12- 21 என்ற கணக்கில் மோசமாக தோற்றார். இதனையடுத்து நடந்த 2-வது சுற்றை ஸ்ரீகாந்த் 21-18 என தனதாக்கினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடி 21- 16 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • எச்எஸ் பிரனோய் 24-22, 21-10 என்ற நேர்செட்டில் காலே கோல்ஜோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-12, 21-7 என்ற நேர்செட்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்எஸ் பிரனோய் 24-22, 21-10 என்ற நேர்செட்டில் காலே கோல்ஜோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-12, 21-7 என்ற நேர்செட்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.

    இதனையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார். அவர் டென்மார்க் வீரரான நிஷிமோட்டோவிடம் 14-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீ காந்த், சக இந்திய வீரரான லக்சயா சென் ஆகியோர் மோதினர்.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21 - 17 , 22- 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீ காந்த் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஜகர்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீ காந்த், சக இந்திய வீரரான லக்சயா சென் ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21 - 17 , 22- 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீ காந்த் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    பெண்கள் ஒற்றைய பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து இந்தோனேசியா ஓபன் சாம்பியனான தை சூயிங்கிடம் 21-18, 21-16 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். சீன தைபே வீராங்கனைக்கு எதிராக 24 நேருக்கு நேர் சந்தித்த சிந்துவின் 19-வது தோல்வி இதுவாகும்.

    • ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தினார்.
    • பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர்.

    சிங்கப்பூர்:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கியது. வருகிற 11-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.49 லட்சம் பரிசாக கிடைக்கும்.

    இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரனோய் 15-21 19-21 என்ற கணக்கில் ஜப்பான் வீரரான நரோகாவிடம் தோல்வியடைந்தார்.

    பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர். இதில் 21-18 19-21 17-21 என்ற கணக்கில் அவர் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ராட்சனோக் இன்டோனனை எதிர்கொண்டார். இதில் 21-15 21-19 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி , தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் ஆகியோர் மோதினர்.
    • பரபரப்பான ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி , தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21- 19 , 21-19 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார். இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    உலகின் 9-வது இடத்தில் இருக்கும் பிரனோய், உலகின் 11-ம் நிலை வீரரான லியை 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 16-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனையான அயா ஓஹோரியை 16-21, 11-21 என்ற கணக்கில் பிவி சிந்து வீழ்த்தினார். இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் நடந்தது.

    இதன் மூலம் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரணாய் பெண்கள் பிரிவில் பிவி சிந்து ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். #HongKongOpen #PVSindhu #Srikanth
    கோவ்லூன்:

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 13-21, 21-17 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் நிட்சான் ஜின்டாபோலை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-10, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுஷியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.



    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-17, 21-14 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் சுப்பான்யு அவிஹிங்சனோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-11, 21-15 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் வோங் விங் கி வின்சென்டை சாய்த்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-16, 11-21, 15-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரர் கோசித் பெட்ராடாப்பிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 16-21, 13-21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியா வீரர் அந்தோணி சினிசுகாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.  #HongKongOpen #PVSindhu #Srikanth 
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறினார். #ChinaOpen
    புஜோவ்:

    சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14-21, 14-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீரர் ஷோ டியான் சென்னிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டு வெளியேறியது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி 2-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #SrikanthKidambi
    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி தென்கொரியாவின் லீ டாங் கெயுன்-ஐ எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 12-21 என எந்தவித போராட்டமின்றி ஸ்ரீகாந்த் கிதாம்பி இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய ஸ்ரீகாந்த் 2-வது செட்டை 21-16 எனவும், வெற்றிக்கான 3-வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் நம்பர் வீரரான கேன்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற டென்மார்க் ஓபன் அரையிறுதியில் மொமோட்டாவிடம் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் சாய்னா நேவால் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். #DenmarkOpen #SainaNehwal
    ஓடென்ஸ்:

    டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் காலிறுதி போட்டியில் விளையாடினார்.

    இதில் முதல் செட்டை ஒகுஹராவிடம் பறிகொடுத்த நேவால் மீண்டு வந்து அடுத்த 2 செட்களிலும் கவனமுடன் விளையாடி தனது ஆதிக்கத்தினை செலுத்தி போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    இந்த போட்டியில் 21-17, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை நேவால் வீழ்த்தினார். இந்த போட்டி 58 நிமிடங்கள் நீடித்தது. #DenmarkOpen #SainaNehwal
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் கெம்கியை தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். #ChinaOpen2018 #KidambiSrikanth
    சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தும், டென்மார்க் நாட்டை சேர்ந்த ராஸ்மஸ் கெம்கியும் இன்று மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து, 21-9 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார்.

    இதையடுத்து இரண்டாவது சுற்றில் டென்மார்க் வீரர் கெம்கி கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனால் கிடாம்பி ஸ்ரீகாந்த் பொறுப்புடன் விளையாடி 21-19 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், 21-9, 21-19 என்ற நேர் செட்களில் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.  

    மற்றொரு போட்டியில், இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ஹாங் காங் வீரர் லாங் அங்கசிடம் 21-16, 21-12 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். #ChinaOpen2018 #KidambiSrikanth
    உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். #SainaNehwal
    நான்ஜிங்:

    24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 72-ம் நிலை வீராங்கனை அலியே டெமிர்பாக்கை (துருக்கி) சந்தித்தார்.

    38 நிமிடம் நடந்த இந்த மோதலில் சாய்னா 21-17, 21-8 என்ற நேர்செட்டில் டெமிர்பாக்கை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். சாய்னா அடுத்து தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என்ற நேர்செட்டில் 87-ம் நிலை வீரர் ஹட் நுயேனை (அயர்லாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 37 நிமிடம் தேவைப்பட்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை சந்திக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத்தை எதிர்த்து விளையாட வேண்டிய தென்கொரியா வீரர் சன் வான் ஹோ காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால், சாய் பிரனீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2-வது சுற்றை எட்டினார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்-கிறிஸ் லாங்கிரிட்ஜ் இணையை வீழ்த்தியது.

    இதே போல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 19-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சியாங் காய் சின்-ஹூங் ஷி ஹான் இணையை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

    கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை 21-9, 22-20 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்புஸ்-இசபெல் ஹெர்ட்ரிச் ஜோடியை வெளியேற்றியது. #SainaNehwal

    இந்தோனேசியா ஒபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த கிதாம்பி முதல் சுற்றிலேயே கடும் சவாலை சந்திக்க இருக்கிறார். #Srikanth
    கடந்த வாரம் மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் யாரும் அரையிறுதியை தாண்டவில்லை.

    ஆண்களுக்கான அரையிறுதி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, ஜப்பானைச் சேர்ந்த கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.



    இந்நிலையில் நாளை இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ஜகர்த்தாவில் நடக்கிறது. இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பியும், கோன்டே மொமோட்டாவும் முதல் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்த காத்திருக்கிறார்கள்.

    மலேசிய ஓபனில் அடைந்த தோல்விக்கு ஸ்ரீகாந்த் பதிலடி கொடுப்பாரா? என்று பார்ப்போம். சாய்னா நேவால் இந்தோனேசியாவின் டினர் டியா அயுஸ்டைனை எதிர்கொள்கிறார்.
    ×