என் மலர்
நீங்கள் தேடியது "இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்"
- இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிசுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் மான் வெய் சோங்-டீ கை வுன் ஜோடி உடன் மோதியது.
ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட மான் வெய் சோங்-டீ கை வுன் ஜோடி 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதன்மூலம் காலிறுதியில் தோல்வி கண்ட சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கி ரெட்டி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- முதல் செட்டை சிந்து 22-20 என கைப்பற்றினார்.
- அடுத்த 2 செட்டுகளை 10-21, 18-21 என்ற கணக்கில் சிந்து இழந்தார்.
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, டென்மார்க்கின் ராஸ்மஸ் க்ஜோர்-ஃபிரடெரிக் சோகார்ட் ஜோடியுடன் மோதியது.
இந்த போட்டியில் முதல் செட்டை இழந்த இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றியது. இதனால் 16-21, 21-18, 22-20 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, உலகின் 8-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங்குடம் மோதினார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சிந்து கைப்பற்றிய நிலையில் அடுத்த 2 சுற்றுகளை அவர் இழந்தார். இதனால் 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியடைந்தார்.
- இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.
ஜகார்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் கர்னாண்டோ-பகாஸ் மவுலானா ஜோடியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 18-21, 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீ காந்த், சக இந்திய வீரரான லக்சயா சென் ஆகியோர் மோதினர்.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21 - 17 , 22- 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீ காந்த் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜகர்த்தா:
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீ காந்த், சக இந்திய வீரரான லக்சயா சென் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21 - 17 , 22- 20 என்ற செட் கணக்கில் ஸ்ரீ காந்த் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பெண்கள் ஒற்றைய பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து இந்தோனேசியா ஓபன் சாம்பியனான தை சூயிங்கிடம் 21-18, 21-16 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். சீன தைபே வீராங்கனைக்கு எதிராக 24 நேருக்கு நேர் சந்தித்த சிந்துவின் 19-வது தோல்வி இதுவாகும்.






