என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indonesia Masters badminton"

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.
    • இந்த ஆட்டத்தில் 21-13, 21-17 என்ற கணக்கில் சிந்து தோல்வியடைந்தார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் 21-13, 21-17 என்ற கணக்கில் சீனா வீராங்கனை சென் யூபி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த பக்கபோன் தீரரட்சகுல் ஆகியோர் மோதினர்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் தீரரட்சகுல் 21-18, 22-20 செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    • இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, டென்மார்க்கின் லைன் ஜேயர்ஸ்பெல்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பிவி சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதுகிறார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், கிரண் ஜார்ஜ், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.
    • பி.வி.சிந்து 22-20, 21-18 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மனானி சுய்சூவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஜகர்த்தா:

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், கிரண் ஜார்ஜ், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 21-18 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மனானி சுய்சூவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அன்மோல் கார்ப் 21-16, 21-17 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் பாய் யூ போவை விரட்டியடித்தார். அதே சமயம் ஆகர்ஷி காஷ்யப் 21-8, 20-22, 17-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஜூலி டாவலிடம் போராடி பணிந்தார். மாள்விகா பான்சோத், தன்வி ஷர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

    • இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் வாங் சூ வெய் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடியா லக்ஷயா சென் முதல் செட்டை 21-13 என வென்றார். இதற்கு பதிலடியாக தைவான் வீரர் 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-14 என்ற செட் கணக்கில் வென்ற லக்ஷயா சென் இரண்டாவ்து சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-15, 21-23, 24-22 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • 19 வயதான அன்மோல் கார்ப் கனடா வீராங்கனையை 21-18, 20-22, 21-19 என வீழ்த்தினார்.
    • 24 வயதான ஆகார்ஷி 21-13, 21-17 என மற்றொரு இந்திய வீராங்கனையை வீழ்த்தினார்.

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் முதன்மை சுற்றில் விளையாடுவதற்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான அன்மோல் கார்ப், கனடாவைச் சேர்ந்த வென் யு சாங்கை 21-18, 20-22, 21-19 என வீழ்த்தினார்.

    24 வயதான ஆகார்ஷி 21-13, 21-17 என மற்றொரு இந்திய வீராங்கனை இஷாாணி பருவாவை வீழ்த்தினர். இதன்மூலம் முதன்மை சுற்றுக்கு இருவரும் முன்னேறினர்.

    பி.வி. சிந்து, மாளவிகா பன்சாட் மற்றும் தன்வி ஷர்மா ஆகியோர் தரவரிசை அடிப்படையில் முதன்மை சுற்றில் விளையாட அனுமதி பெற்றுள்ளனர்.

    ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் எம்.ஆர். அர்ஜூன்- ஹரிஹரன் அம்சகருணன் ஜோடி இந்தோனேசிய ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் சாத்விக் - சிராக் செட்டி ஜோடி வெற்றி பெற்றது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கியது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் செட்டி ஜோடி, சீன தைபே அணியின் சென் ஸி ரே-லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்துவருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான சிந்து, மாளவிகா, பிரணாய், லக்ஷயா சென் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் டகுமா ஒபயாஷி உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கே. நிஷிமோட்டோ ஆகியோர் மோதினார்.
    • முதல் செட்டை நிஷிமோட்டோவும் 2-வது செட்டை லக்ஷயா சென்னும் வென்றனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கே. நிஷிமோட்டோ ஆகியோர் மோதினார்.

    இதில் முதல் செட்டை நிஷிமோட்டோவும் 2-வது செட்டை லக்ஷயா சென்னும் வென்றனர். தொடர்ந்து 3-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 3-வது செட்டில் லக்ஷயா சென் 21-23 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

    இதனால் 2-வது சுற்று ஆட்டத்தில் 16-21, 21-12, 21-23 என்ற கணக்கில் லக்ஷயா சென் தோல்வியடைந்து இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்திய தோல்வி அடைந்தது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் தனிஷா க்ராஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, மலேசியா ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-18 என வென்றது. இதனால் அதிரடியாக ஆடிய மலேசிய ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-19 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    இதன்மூலம் கலப்பு இரட்டையரிலும் தோல்வி அடைந்த இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறினார். #SainaNehwal
    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டமொன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் சீனாவின் ஹே பிங்ஜியாவோவை எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா நேவால் 18-21, 21-12, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #SainaNehwal
    ×