என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய சபலென்கா
    X

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய சபலென்கா

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது.
    • சபலென்கா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் புதிய சீசனை வெற்றியோடு தொடங்கினார்.

    பிரிஸ்பேன்:

    ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய 'நம்பர் ஒன்' வீராங்கனை பெலாரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை சந்தித்தார்.

    தனது அதிரடியான ஷாட்டுகளால் கிறிஸ்டினாவை திணறடித்த சபலென்கா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் புதிய சீசனை வெற்றியோடு தொடங்கினார். இந்த வெற்றிக்கு அவருக்கு 48 நிமிடங்களே தேவைப்பட்டது. தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் கஜகஸ்தானின் எலினா ரைபகினா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் சீனாவின் சூவாய் ஜாங்கை வெளியேற்றினார்.

    எகதெரினா அலெக்சாண்ட்ரா, டயானா ஸ்னைடர் (ரஷியா), கரோலின் முச்சோவா (செக்குடியரசு), சோரனா கிர்ஸ்டியா (ருமேனியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

    இதன் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் பாப்லோ காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) விரட்டினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் உள்ளூர் நட்சத்திரம் நிக் கிரியாசுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    Next Story
    ×