என் மலர்
நீங்கள் தேடியது "Winter Olympics"
- வரும் 22 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
- கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 10,500 வீரர்களுக்காக சுமார் 3 லட்சம் காண்டம்கள் வழங்கப்பட்டன.
2026 ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியின் கேம்ஸ் வில்லேஜில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கின. வரும் 22 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த போட்டியில் கலந்துகொள்ளவும், பார்வையிடவும் உலகெங்கிலும் இருந்து பலர் வருகை தந்துள்ளனர்.
கேம்ஸ் வில்லேஜில் 92 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,900 தடகள வீரர், வீராங்கனைகள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் வீரர்களுக்காக இலவசமாக வைக்கப்பட்டிருந்த காண்டம்கள் படு வேகமாக காலியாகி உள்ளது போட்டி ஏற்பாட்டாளர்களை மலைப்பில் ஆழ்த்தியுள்ளது.
முதற்கட்டமாக வீரர்களுக்காக வில்லேஜில் சுமார் 10,000 காண்டம்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த இருப்பு 3 நாட்களில் காலியாகியுள்ளன.
கடந்த 2024 பாரிஸ் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் 10,500 வீரர்களுக்காக சுமார் 3 லட்சம் காண்டம்கள் வழங்கப்பட்டன.
குளிர்கால ஒலிம்பிக்கில் வீரர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இந்த முறை குறைவாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், வீரர்களின் அதீத தேவை காரணமாக காண்டம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காண்டம் இருப்பு முழுமையாகத் தீர்ந்துவிட்டதாகவும், புதிய இருப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை என்றும் வீரர் ஒருவர் இத்தாலிய ஊடகதிற்கு பேட்டியளிக்கும்போது தெரிவித்துள்ளார்.
புதிய இருப்பு விரைவில் கொண்டுவரப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கவும், எச்.ஐ.வி போன்ற நோய்த்தொற்றுகளை தடுக்கவும் 1988 சியோல் ஒலிம்பிக்ஸ் முதல், வீரர்களுக்கு இலவசமாக காண்டம்கள் வழங்கும் வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டி வெற்றிகரமாக இருக்கும்.
- குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கும் இது பொருந்தும்- மேக்ரான்.
பிரான்ஸ் நாட்டின் பிரபலமான ஆல்ப்ஸ் 2030 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிரான்ஸ் அரசு வருகிற அக்டோபர் மாதம் 1-ந்தேதிக்குள் நிதி மற்றும் உத்தரவாதம் தொடர்பான உத்தரவாதம் அளிக்க வேண்டும். பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அதற்கான ஒப்புதலை மார்ச் 1-ந்தேதிக்குள் பெற வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
2034 குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை அமெரிக்காவின் சால்ட் லேக் நகர் பெற்றுள்ளது.
2024 ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் பிரான்ஸ் அரசின் முழு அர்ப்பணிப்பை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். பாரீஸ் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டி வெற்றிகரமாக இருக்கும். மேலும் 2030-ல் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கும் இது பொருந்தும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், "நீங்கள் எங்களை நம்பலாம். 2030 குளிர்கால ஒலிம்பிக் மற்றும் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான இந்த வேட்புமனுவை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்" என்றார்.
2030 குளிர்கால போட்டியை நடத்த பிரான்ஸ் தவிர மற்ற நாடுகள் போட்டியிடவில்லை. என்றாலும் ஆல்ப்ஸில் நடத்த வேண்டாம் என நான்கு ஐஓசி உறுப்பினர் நாடுகள் வாக்களித்தன. ஏழு நாடுகள் நடுநிலை என வாக்களித்தன. மொத்தம் 95 உறுப்பின நாடுகள் வாக்களித்தன.






