கிம் யோ ஜாங் மற்றும் மைன் பென்ஸ் (புகைப்படம் ஏ.எப்.பி)
செய்திகள்
குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அருகருகே கண்டுகளித்த இரு துருவங்கள்
குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவை வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அருகருகே அமர்ந்து விழாவை கண்டுகளித்தனர். #PyeongChang2018 #WinterOlympics
தென்கொரியாவில் இன்று தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வடகொரிய பாராளுமன்ற தலைவர் கிம் யாங் நம் தலைமையில் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் ஆகியோர் குழுவாக இன்று சென்றிருந்தனர்.
பியூங்சங் நகரில் இன்று நடந்த தொடக்க விழாவில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடக்க விழா மேடையில் கிம் யோ ஜாங் வந்த போது, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் கை குலுக்கு வரவேற்றார்.
கிம் யோ ஜாங்-க்கு கை கொடுக்கும் மூன் ஜே-இன்

