என் மலர்
நீங்கள் தேடியது "Manika Batra"
- மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், இந்தியாவின் மணிகா பத்ரா, சீனாவின் கியன்டியான்யியுடன் மோதினார்.
- கியன்டியான்யி 11-8, 11-8, 12-10 என்ற செட் கணக்கில் மணிகா பத்ராவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
புதுடெல்லி:
பிரான்ஸ் நாட்டின் மான்ட்பெல்லியர் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, சீனாவின் கியன் டியான்யியுடன் மோதினார்.
இதில் கியன் டியான்யி 11-8, 11-8, 12-10 என்ற செட் கணக்கில் மணிகா பத்ராவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இந்தத் தொடரில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ஜா அகுலா, முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் மணிகா பத்ரா - பெர்னாடெட் உடன் மோதினர்.
- இதில் மணிகா பத்ரா வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மான்ட்பெல்லிர்:
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் போட்டி பிரான்சில் உள்ள மான்ட்பெல்லிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 11-9, 6-11, 13-11, 11-9 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்சை (ருமேனியா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் மணிகா பத்ரா, சீனாவின் கியான் தியானியை எதிர்கொள்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பத்ரா பெற்றார்.
முன்னதாக நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 11-6, 7-11, 1-11, 11-8, 8-11 என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீராங்கனையான அட்ரியானா டியாசிடம் (பியூர்டோரிகோ) பணிந்தார்.
- முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது.
- 2-வது மேட்சில் மணிகா பத்ரா 1-3 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது.
முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி ஜெர்மனியின் ஜியாவோனா ஷான்- யுயன் வான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது.
2-வது மேட்சில் மணிகா பத்ரா- ஜெர்மனியின் அன்னெத் கவ்மான் மோதினார்கள். இதில் மணிகா பத்ரா 1-3 எனத் தோல்வியடைந்தார்.
3-வது மேட்சில் அர்ச்சனா கிரிஷ் கமத்- ஜியாவோனா ஜோடி விளையாடியது. இதில் அர்ச்சனா 3-1 என வெற்றி பெற்றார்.
4-வது போட்டியில் ஸ்ரீஜா அகுலா- அன்னெட் கவ்மான் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்ரீஜா 0-3 எனத் தோல்வியடைந்தார். இதனால் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்து வெளியேறியது.
தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்ர் தடை ஓட்டம் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி ஏமாற்றம் அடைந்தார்.
- பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார்.
- குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்றார். குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மனிகா பத்ரா, ஜப்பான் வீராங்கனை மியூ ஹிரானோ உடன் மோதினார். இதில் பத்ரா 1-4 என்ற புள்ளிக் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
மியூ ஹிரானோ ஒலிம்பிக் மற்றும் பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
- ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் அர்ஜூன் பாபுதா வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் வென்றார்.
துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மானு பாகெர் வெண்கலம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதினார். இதில் பத்ரா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ஸ்ரீஜா அகுலா 4-11, 4-11, 15-13, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி:
சீனாவில் உள்ள மக்காவ் நகரில் ஐடிடிஎஃப் உலக கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனையான மணிகா பத்ரா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் மான்யூவுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 6-11, 4-11, 9-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரீஜா அகுலா, உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியனான சீனாவின் ஷென் மெங்குடன் மோதினார்.
இதில் உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ஸ்ரீஜா அகுலா 4-11, 4-11, 15-13, 2-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா ஆகிய இருவருமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து உள்ளனர்.
- உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது.
- முதல் இரண்டு சுற்றில் மணிகா பத்ரா வெற்றி பெற்றிருந்தார்.
டர்பன்:
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, 13-வது இடத்தில் உள்ள அட்ரினா டியாஸ்சை (புயர்டோரிகோ) சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா 11-6, 10-12, 9-11, 11-6, 11-13, 11-9, 3-11 என்ற செட் கணக்கில் அட்ரினாடியாஸ்சிடம் போராடி வீழ்ந்து நடையை கட்டினார்.
முதல் இரண்டு சுற்றில் மணிகா பத்ரா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக மணிகா பத்ரா பதக்கம் வென்றார்.
- வெண்கலம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்றது. இத்தொடரில் முதல்முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார். இதில் 2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மணிகா தோல்வியடைந்தார்.
இதையடுத்து நேற்று நடந்த வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார். இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார். மேலும், 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக பதக்கம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெண்கலம் வென்று ஆசிய கோப்பையில் இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றை எழுதியதற்காக மணிகா பத்ராவை வாழ்த்துகிறேன். அவரது வெற்றி இந்தியா முழுவதும் உள்ள பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மற்றும் டேபிள் டென்னிஸை இன்னும் பிரபலமாக்கும் என பதிவிட்டுள்ளார்.
- அரையிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.
- வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார்.
பாங்காங்:
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீரங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார். இதில் 2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மனிகா தோல்வியடைந்தார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார். இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில்
வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்று இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது.
போட்டி நிறைவுக்கு பின்னர் பேசிய அவர், இது மிகப்பெரிய வெற்றியாகும், சிறந்த வீரர்களை தோற்கடித்தேன். நான் அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாடி, சிறப்பாகப் போராடி ஒரு அற்புதமான முடிவை எட்டினேன். எனது எதிர்காலப் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.
டெல்லியை சேர்ந்த 23 வயதான மனிகா பத்ரா அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். உலக தரவரிசையில் 56-வது இடத்தில் இருக்கும் மனிகா பத்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது மற்றும் 20-வது இடத்தில் உள்ள வீராங்கனைகளை வீழ்த்தி இருக்கிறேன். இது எனது மனஉறுதியை பலப்படுத்தி இருக்கிறது.
அடுத்து நான் ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக உழைக்க இருக்கிறேன். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன். உலக தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் வருவதும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதும் தான் எனது இலக்காகும்’ என்று தெரிவித்தார். #ManikaBatra #Olympic
பெரிய பெரிய தொடரில் சாதிக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநிலங்கள் ஊக்கத்தொகை அறிவிக்கும்.
வெளிமாநிலங்கள் அதிகத் தொகை கொடுத்த போதிலும் டெல்லி அரசு தங்கத்திற்கு 14 லட்சம் ரூபாயும், வெள்ளிக்கு 10 லட்சம் ரூபாயும், வெண்கலத்திற்கு 6 லட்சம் ரூபாயும் கொடுத்து வந்தது. இது மிகவும் குறைவு என்பதால் ஊக்கத்தொகையை அதிகரித்து டெல்லி அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
பரிந்துரையின்படி மணிகா பத்ராவிற்கு நான்கு பதக்கத்திற்கான தொகையாக 1.7 கோடி ரூபாய் டெல்லி அரசு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. டெல்லியில் நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் பெடரேசன் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இதை மணிகா பத்ரா தெரிவித்தார்.
இதுகுறித்து மணிகா பத்ரா கூறுகையில் ‘‘இதுவரை ஏன் பணம் வரவில்லை என்று எனக்குத் தெரியாது. ஆனால், பணம் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்’’ என்றார்.
டெல்லி அரசின் கல்வித்துறைக்கான (விளையாட்டு) துணை இயக்குனர் தர்மேந்தர் சிங், மணிகா பத்ரா ஃபைல் கேபினட் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றார்.