search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால் இறுதி"

    • ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது.
    • போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.

    கொலோன்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-சுலோவாக்கியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

    சுலோவாக்கியா அணிக்காக 25-வது நிமிடத்தில் இவான் ஷ்ரான்ஸ் கோல் அடித்தார். ஆட்டம் நிறைவடையும் தருவாயில் இங்கிலாந்துக்காக பெல்லிங்காம் கோல் அடித்தார். கடைசி நிமிட கோலால் இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பியது.

    இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி கால்இறுதியில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த மற்றொரு 2-வது சுற்று போட்டியில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

    ஸ்பெயின் அணியில் ரோட்ரி (39-வது நிமிடம்), ரூயிஸ் (51), வில்லியம்ஸ் (75), ஒல்மோ(91) கோல் அடித்தனர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நார்மென்ட் அடித்த சுயகோலால் ஜார்ஜியாவுக்கு ஒரு கோல் கிடைத்தது.

    ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.

    • ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
    • கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 4-வது சுற்று ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த 17-ம் நிலை வீரரான லாரன்சோ முசட்டியை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-3 , 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்னொரு ஆட்டத்தில் 5-ம் நிலையில் உள்ள ஸ்டேபானோ சிட்சிபாஸ் (கிரீஸ்) 7-5, 6-3, 6-0, என்ற நேர் செட் கணக்கில் செபாஸ்டியன் ஆப்னரை (ஆஸ்திரியா) தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் அல்காரஸ்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா சுவிட்டோலினா 4-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த 9-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 28-வது வரிசையில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ×