என் மலர்
விளையாட்டு
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்- வெண்கலம் வென்று இந்திய வீராங்கனை சாதனை
- அரையிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.
- வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார்.
பாங்காங்:
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய நட்சத்திர வீரங்கனை மணிகா பத்ரா, தர வரிசையில் இரண்டாம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை மீமா இட்டோவை எதிர்கொண்டார். இதில் 2-4 (8-11, 11-7, 7-11, 6-11, 11-8, 7-11) என்ற செட் கணக்கில் மனிகா தோல்வியடைந்தார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா சந்தித்தார். இதில் 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில்
வெற்றி பெற்ற மணிகா, இந்த தொடரில் முதன்முறையாக பதக்கம் வென்று இந்திய வீராங்கனை என்ற அபார சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 அமெரிக்க டாலர் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது.
போட்டி நிறைவுக்கு பின்னர் பேசிய அவர், இது மிகப்பெரிய வெற்றியாகும், சிறந்த வீரர்களை தோற்கடித்தேன். நான் அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாடி, சிறப்பாகப் போராடி ஒரு அற்புதமான முடிவை எட்டினேன். எனது எதிர்காலப் போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.