search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paris Olympics"

    • நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும்
    • இந்திய ஒலிம்பிக் சங்கம் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் வினேஷ் போகத் குற்றம் சாட்டினார்

    பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் மல்யுத்தத்தில் [50 கிலோ எடைப்பிரிவில்] இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்று பெருமையைப் பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக உள்ளதாக கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் அவரது மனு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே மல்யுத்தத்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்து அரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் மறுக்கத்தை மறுத்த நடுவர் நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்று அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

    செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் வினேஷிடம் மேல்யுமறையீடு செய்யலாம் என்று கூறியதாகவும், அதற்கு இந்த விவகாரத்தை மேற்கொண்டு அவர் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனது தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் சங்கத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் மெத்தனமாகச் செய்யப்பட்டதாகவும் வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரட்டை வெண்கல பதக்கம் வென்றார்.
    • மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார் .

    இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதலில் இரட்டைப் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • வெற்றி பெற்ற பிறகு மேடையில் தென் கோரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர்
    • வீரர்களுக்கு வெளிநாட்டு கலாச்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கருத்தியல் ரீதியான மனோதத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது

    2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற வட கோரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் சேர்ந்து சிரித்தபடி செல்ஃபி எடுத்ததால் சிக்கலில் மாட்டியுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வடகொரிய வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற பிறகு மேடையில் தென் கோரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டனர். போட்டிக்கு முன்பே மற்ற நாட்டு வீரர்களுடன், குறிப்பாக தென் கொரிய வீரர்களுடன் உறவு கொண்டாடக் கூடாது என வட கொரிய வீரர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

     

    இந்நிலையில் தற்போது வட கொரியா திரும்பியுள்ள அனைத்து வீரர்களுக்கும் வெளிநாட்டு கலாச்சார பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கருத்தியல் ரீதியான மனோதத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாட்டை மீறி எதிரி நாடான தென் கொரியா வீரர்களுடன் சிரித்ததற்காக டேபிள் டென்னிஸ் வீரர்கள் ரி ஜோங் சிக், கிம் கும் யோங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

    • டேபிள் டென்னிஸில் சீனா மற்றும் கொரிய வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்
    • 24 வயதாகும் அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து விலகி படிப்பைத் தொடர முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

    2024 பாரீஸ் ஒலிம்பிக்சில் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகியோர் போட்டியிட்டனர். ஒற்றயர் பிரிவில் போட்டியிட்ட மனிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் முதல்முறையாகக் காலிறுதிக்கு முந்திய சுற்று வரை முன்னேறி சாதனை படைத்தனர். அணியாகவும் இந்த மூன்று வீராங்கனைகளுக்கு ஒன்றிணைத்து காலிறுதி சுற்று வரை முன்னேறி சாதித்தனர்.

    காலிறுதிப் போட்டியில் இந்திய அணியில் அர்ச்சனா காமத் மட்டுமே ஒரேயொரு சுற்றில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் இந்த வெற்றிகள் அர்ச்சனாவுக்கு போதுமானதாக இல்லை. 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க உள்ள ஒலிம்பிக்கிலும் வெற்றி பெறுவோமா என்ற உறுதியாகத் தெரியாத நிலையில் டேபிள் டென்னிஸை கைவிட்டு அமெரிக்காவில் படிப்பைத் தொடர அர்ச்சனா முடிவெடுத்துள்ளார். 

    டேபிள் டென்னிஸில் சீனா மற்றும் கொரிய வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வருங்காலங்களில் வெற்றி என்பது சத்தியம்தானா என்று தனது பயிற்சியாளர் கார்க் - உடன் தீவிரமாக ஆலோசித்து உள்ளார். உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னேறினால் மட்டுமே பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும். எனவே பொருளாதார ரீதியாகவும் பலன்கள் இல்லாத நிலையில்தான் 24 வயதாகும் அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து விலகி படிப்பைத் தொடர முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

    முன்னதாக தனது இளைய சகோதரர் நாசாவில் பணியாற்றி வருவதாகவும், அவர் தான் தனது ரோல் மாடல் என்றும் அர்ச்சனா பேசியிருந்தார். படிப்பை தொடர அவர் எனக்கு ஆதரவாக இருக்கிறார். நல்லபடியாக படித்து முடிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் பொருளாதாரம் தொடர்புடைய படிப்பில் அர்ச்சனா சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    • தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதக்கம் பறிபோனது.
    • மேளதாளத்துடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி யில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இறுதிப்போட்டி வரை நுழைந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது பதக்கம் பறிபோனது. இதை தொடர்ந்து வினேஷ் போகத் அதிர்ச்சி அடைந்து ஓய்வு முடிவை அறிவித்தார்.

    தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அவரின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    மன வேதனையுடன் வினேஷ் போகத் நேற்று முன்தினம் நாடு திரும்பி னார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பதக்கத்தை பெற முடியா விட்டாலும் நாடு முழுவதும் அனைவரது மனங்களையும் வென்ற வினேஷ் போகத்துக்கு மேளதாளத்துடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    பின்னர் அவர் காரில் அவரது சொந்த ஊரான அரியானா மாநிலம் பலாலி கிராமத்துக்கு சென்றார். மக்கள் வழிநெடுகிலும் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்து இருந்தனர்.

    அதன் பிறகு நடந்த பாராட்டு விழாவின்போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் காட் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வினேஷ் போகத்துக்கு தங்கப்பதக்கம் வழங்கினார்கள்.

    பாராட்டு விழாவின் போது உடல்நிலை சரியில்லாமல் வினேஷ் போகத் மயங்கி விழுந்தார். அவர் 20 மணி நேரத்துக்கும் அதிமாக தொடர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் மிகவும் களைப்படைந்து சோர்வுடன் காணப்பட்டார். இதன் காரணமாகவே மயக்கமானார்.

    வினேஷ் போகத் நாற்காலியில் மயங்கி கிடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. 

    • அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார்.
    • வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் நேற்றைய தினம் நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார். அங்கு ஊர் மக்கள் திரண்டு வினேஷ் போகத்தின் வருகையை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மாலை மரியாதைகள், பரிசுப் பொருட்கள் என வழங்கி ஊர் மக்கள் வினேஷ் போகத்தை உச்சி முகர்ந்து வருகின்றனர். வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது.

    வினேஷ் போகத்தை கவுரவிக்கும் விதமாக ஊர் மக்கள் ஒன்றிணைத்து அவருக்கு தங்கப் பதக்கத்தையும் வழங்கினர். ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து காசு போட்டு வினேஷ் போகத்துக்கு பரிசுத்தொகை வழங்கியுள்ளனர்.

    தனது உறவினரும் குருவுமாக மகாவீர் சிங் கிடம் ஆசி பெற்ற அவர் கண்ணீர் விட்டு அழுதார். ஊர் மக்களின் அன்பு குறித்து வினேஷ் போகத் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாதது எனது வாழ்க்கையில் ஆறாத வடுவாக இருக்கும். இனியும் நான் மல்யுத்தத்தில் ஈடுபடுவேனா மாட்டேனா என்று தெரியவில்லை.

    எனக்கு இங்கு வந்தவுடன் கிடைத்த அன்பு எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த நபிக்கையை கொண்டு சரியான திசையில் பயணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் முன்னதாக வினேஷ் கூறியபடி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    • வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    • இந்தியா வந்தடைந்த வினேஷ் போகத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பினார். இன்று, வினேஷ் போகத் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வினேஷ் போகத்தை வரவேற்க அவரது சகோதரர் ஹரிந்தர் சிங் வந்திருந்தார்.

    விமான நிலையத்திற்கு வந்திருந்த மல்யுத்த வீரர்களான சாக்க்ஷி மாலிக், பஜ்ரங் புனியாவை பார்த்ததும் வினேஷ் போகத் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார்.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், 'வெல்கம் சாம்பியன் வினேஷ் போகத்' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து உருக்கமாக அறிக்கை ஒன்றை வினேஷ் வெளியிட்டிருந்தார்.
    • ஷாக்சி மாலிக், பஜ்ரங் புனியாவை பார்த்ததும் வினேஷ் போகத் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார்.

    அதில், "என்னுடைய எதிர்காலம் என்ன, அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை என்னால் தற்போது கணிக்க முடியாது. ஆனால் நான் எதை நம்புகிறேனோ, அதற்காகவும் சரியான விஷயத்திற்காகவும் எப்போதும் போராடுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

    இன்று, வினேஷ் போகத் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வினேஷ் போகத்தை வரவேற்க அவரது சகோதரர் ஹரிந்தர் சிங் வந்திருந்தார்.

    விமான நிலையத்திற்கு வந்திருந்த மல்யுத்த வீரர்களான ஷாக்சி மாலிக், பஜ்ரங் புனியாவை பார்த்ததும் வினேஷ் போகத் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார்.

    • வெள்ளிப் பதக்கம் கோரி வினேஷ் அளித்த மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    • வினேஷ் போகத் விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், உயிரிழந்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து வினேஷ் போகத்தின் பயிற்சியாளரான ஹங்கேரியைச் சேர்ந்த வோலர் அகோஸ் பேசியுள்ளார்.

    "அரையிறுதிக்குப் பிறகு, வினேஷ் போகத்திற்கு 2.7 கிலோ எடை அதிகமாக இருந்தது. எடை குறைப்புக்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் விடிய விடிய மேற்கொண்ட பயிற்சிகளால் அவர், உயிரிழந்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது.

    வினேஷ் என்னிடம் பேசிய போது, "நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான் உலகின் சிறந்த வீராங்கனையை (ஜப்பானின் யுகி சுசாகி) தோற்கடித்து உள்ளேன். நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். உலகின் சிறந்த வீராங்கனைகளில் நானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளேன். பதக்கம், பதக்க மேடை எல்லாம் வெறும் பொருட்கள்தான். செயல் திறனை யாராலும் பறிக்க முடியாது" என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.

    • வெள்ளிப் பதக்கம் கோரி வினேஷ் அளித்த மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    • எனக்குள் சண்டையும் என்னுள் மல்யுத்தமும் எப்போதும் உயிருடன்தான் இருக்கும்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14 அன்று தள்ளுபடி செய்தது.

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று வினேஷ் போகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டு கீழே படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தின் போது, இந்திய பெண்கள் மற்றும் தேசிய கொடியின் புனிதத்தை பாதுகாக்க கடுமையாக போராடினேன். ஆனால் கடந்த ஆண்டு மே 28 அன்று முதல் தேசியக் கொடியுடன் நான் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும்போது அது என்னை அச்சுறுத்துகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயரே பறக்க வைக்க வேண்டும் என்பதும், அதன் மதிப்பை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கொடியினை வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது. அப்படி செய்வது, மல்யுத்தத்துக்கு நடந்தவற்றையும், தேசிய கொடிக்கு நடந்தவற்றையும் கண்டிக்கும் விதமாக இருக்கும் என்று நினைத்தேன்.

    சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றை சொல்ல வார்த்தைகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன்.

    ஆகஸ்ட் 6-ந் தேதி இரவும், ஆகஸ்ட் 7ம் தேதி காலையும் நடந்தது குறித்து நான் சொல்ல விரும்பவதெல்லாம் இதுதான். நாங்கள் பின்வாங்கவில்லை. எங்கள் முயற்சிகள் ஒருபோதும் நிற்கவில்லை. நாங்கள் சரணடையவில்லை. ஆனால் கடிகாரம் நின்று விட்டது, காலம் கைகொடுக்க வில்லை. என்னுடைய விதியும் அப்படிதான் இருந்தது.

    என்னுடைய அணிக்கும், சக இந்தியர்களுக்கும், குடும்பத்துக்கும் சாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஒன்று, நிறைவடையாமல் போய் விட்டதாக உணர்கிறேன். ஒருவேளை சூழல்கள் வேறாக இருந்திருந்தால் 2032 வரைக்கும் நான் விளையாடியிருக்கக் கூடும். ஏனென்றால் எனக்குள் இருக்கும் போராட்டமும், மல்யுத்தமும் எப்போதும் அப்படியேதான் இருக்கும்.

    எதிர்காலம் எனக்காக என்ன வைத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க இயலாது. ஆனால் நான் நம்பும் விஷயத்துக்காக, சரியானவற்றுக்காக நான் தொடர்ந்து எப்போதும் போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கம் வென்றார்.
    • தங்கம் வென்ற நதீமுக்கு எருமை மாட்டை மாமனார் பரிசாக வழங்கினார்.

    லாகூர்:

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    அவரை தொடர்ந்து, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தைப் பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றார். இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62-ம் இடத்தை பாகிஸ்தான் பிடித்தது.

    தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்தார். நதீமின் சொந்த ஊரான கானேவாலில் அவரது பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசாக அளித்துள்ளார். அவர்களின் ஊரில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

    நவாசின் மகளான ஆயீஷாவை தான் நதீம் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில், எருமை மாட்டிற்கு பதிலாக 5 அல்லது 6 ஏக்கர் நிலத்தையே பரிசாக கொடுக்கலாம். சரி, எருமை மாடும் பரவாயில்லை தான். கடவுள் அருளால் அவர் சற்று வசதி படைத்தவர். அதனால் எனக்கு எருமை மாட்டை பரிசாக அளித்துள்ளார். அது மதிக்கத் தக்கது என தெரிவித்தார்.

    • வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] தள்ளுபடி செய்தது.
    • இந்த படத்தின் மூலம் மட்டுமே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் [50 கிலோ எடைப் பிரிவு] இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சமேளனமும் கைவிரித்துவிட்டது. வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் அளித்த மனுவையும் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] தள்ளுபடி செய்தது.

    மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் பாரீஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளார். வினேஸ் போகத்துக்கு இந்திய விளையாட்டு ஆளுமைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பதக்கம் நிராகரிக்கப்பட்ட பின் வினேஷ் போகத் முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார். இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் வினேஷ். தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டு கீழே படுத்திருக்கும் அவரது படம் அது. வேறு எந்த குறிப்புகள் அன்றி, இந்த படத்தின் மூலம் மட்டுமே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் வினேஷ் போகத். வேறு எந்த வார்த்தைகளும் அந்த படத்திற்கு மேல் வினேஷ் போகத்துக்கு தேவையும் பட்டிருக்கவில்லை என்றே கூற வேண்டும். 

    ×