என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக் கிராமம்"

    • இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.
    • வழக்கமாக ஒலிம்பிக் கிராமத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை தட்டுப்பாடு என்ற புகார்கள் எழும்.

    மிலான்:

    இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. அங்கு வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக உயர்தர அறைகளை தவிர்த்து பல்வேறு வசதிகள் இலவசமாக வழங்கப்படும். இதில் ஆணுறைகளும் அடங்கும்.

    வழக்கமாக ஒலிம்பிக் கிராமத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்டவை தட்டுப்பாடு என்ற புகார்கள் எழும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுபாடு சற்று வித்தியாசமானது. மிலானில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த 3 நாட் களில் அனைத்து ஆணுறைகளும் தீர்ந்துவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. உலகம் முழுவதும் 3 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டதை தொடர்ந்து இலவசமாக 10 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்பட்டு இருந்ததாக கூறப்படு கிறது. ஆனாலும் அவை அனைத்தும் அங்கு தீர்ந்துவிட்டது.

    1988-ம் ஆண்டு உலகம் முழுவதும் எச்.ஐ.வி. தொற்று பரவல் அதிகரித் ததை தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இலவச மாக ஆணுறைகள் கொடுக்கும் மரபு உருவானது. கடந்த 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வீரர்களுக்கு 3 லட்சம் ஆணுறைகள் கொடுக் கப்பட்டது. 2026-ம் ஆண்டு அதிகபட்சமாக 4% லட்சம் ஆணுறைகள் வழங் கப்பட்டன. இதற்கு நேர்மாறாக மிலானில் குறைந்த அளவில் அதாவது வெறும் 10 ஆயிரம்தான் வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஆணுறைகள் தட்டுப் பாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறுகையில், "ஒலிம்பிக் கிராமத்தில் ஒலிம்பிக் சாசனத்தின் விதி 62-ன் படி, கண்டிப்பாக ஆணுறை வழங்கப்பட வேண்டும். எதிர்பார்த்ததை விடத் தேவை அதிகமாக உள்ளதால், கூடுதல் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் முடியும் வரை தட்டுப்பாடு வராமல் தொடர்ந்து இருப்பு வைக்கப்படும்" என்றார்.

    • ஒலிம்பிக் போட்டியின் போது வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்குவார்கள்.
    • 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கின் போது கொரோனா பரவல் காரணமாக உடல்ரீதியான தொடர்பை தவிர்க்கும்படி போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தினர்.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. 200 நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தொடக்க விழாவை செயின் நதியில் நடத்த போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதாவது தொடக்க விழாவின் முக்கிய அம்சமான வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு படகில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் படகில் 6 கிலோமீட்டர் தூரம் ஈபிள் கோபுரம் நோக்கி பயணிக்க இருக்கிறார்கள். 45 நிமிடங்கள் படகு அணிவகுப்பை பார்க்கலாம். ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    ஒலிம்பிக் போட்டியின் போது வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் தங்குவார்கள். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக 1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் இருந்து ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறையை வைக்கும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கின் போது கொரோனா பரவல் காரணமாக உடல்ரீதியான தொடர்பை தவிர்க்கும்படி போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்த விஷயத்தில் தடை எதுவும் கிடையாது. வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் சிரமமின்றி கிடைக்கும் வகையில் 3 லட்சம் ஆணுறை வரை வைக்கப்பட இருப்பதாக ஒலிம்பிக் கிராமத்தின் இயக்குனர் லாரென்ட் மிசாட் கூறியுள்ளார்.

    ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் விநியோகிக்கப்பட்ட ஆணுறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. "1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் ஆணுறைகள் 50,000 ஆகவும், 2008-ல் பெய்ஜிங்கில் 100,000 ஆகவும், 2012-ல் லண்டனில் 150,000 ஆகவும் உயர்ந்தது

    தென் கொரியாவில் 1988 சியோல் கோடைகால ஒலிம்பிக்கில் ஆணுறைகள் முதலில் வழங்கப்பட்டன.

    ×