என் மலர்

  நீங்கள் தேடியது "Nadal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால், ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
  பாரீஸ்:

  கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

  ஆண்கள் பிரிவில் 11 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஜெர்மனி தகுதி நிலை வீரர் யானிக் மடெனை எதிர்கொண்டார். ‘களிமண் தரை’ போட்டியின் ராஜா என்று வர்ணிக்கப்படும் நடால் வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்தியதோடு 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் யானிக்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 32 வயதான நடால் அடுத்து பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினுடன் மோதுகிறார்.

  மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரர் சிட்சிபாஸ் (கிரீஸ்) 4-6, 6-0, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஹூகோ டெலியனை (பொலிவியா) தோற்கடித்தார். இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஆஸ்கர் ஓட்டியை (ஜெர்மனி) வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோரும் 2-வது சுற்றை வெற்றிகரமாக கடந்தனர்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2016-ம் ஆண்டு சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா லார்சனை (சுவீடன்) சாய்த்து 3-வது சுற்றை எட்டினார். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) தன்னை எதிர்த்த கிறிஸ்டினா குகோவை (சுலோவக்கியா) 6-2, 6-2 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். பிளிஸ்கோவா வெறும் 56 நிமிடங்களில் இந்த வெற்றியை சுவைத்தார். மற்றொரு முன்னணி வீராங்கனை எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) விளையாடாமலேயே 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அவருடன் மோத இருந்த சக நாட்டவரான கத்ரினா கோஸ்லோவா உடல் நலக்குறைவால் விலகியதால் ஸ்விடோலினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  முதல் சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருக்கு அதிர்ச்சி அளித்த ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பொட்டாபோவா 2-வது சுற்றில் 4-6, 0-6 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் வோன்டோரோசோவாவிடம் வீழ்ந்தார். அதே சமயம் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), செவஸ்தோவா (லாத்வியா), கனேபி (எஸ்தோனியா), சுவாரஸ் நவரோ (ஸ்பெயின்) உள்ளிட்டோர் 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

  ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரேசில் வீரர் மார்செலோ டெமோலினருடன் கைகோர்த்து களம் இறங்கினார். இவர்கள் தங்களது முதலாவது சுற்றில் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ராபர்ட் லின்ஸ்டெட் (சுவீடன்)- மார்டோன் புசோவிக்ஸ் (ஹங்கேரி) இணையை தோற்கடித்தனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செம்மண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது. பெண்கள் பிரிவில் செரீனா சாதனைப் படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கடந்த ஜனவரி மாதம் மெல்போர்னில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் பிரிவில் ஒசாகாவும் (ஜப்பான்) பட்டம் பெற்றனர்.

  இந்த ஆண்டின் 2-வது கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது. ஜூன் 9-ந்தேதிவரை இந்த போட்டி நடக்கிறது.

  உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச், நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் தீயெம் (ஆஸ்திரியா), அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி) போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

  பெண்கள் பிரிவில் முதல் நிலை வீராங்கனை ஒசாகா, நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப், கரோலினா, கெர்பர் மற்றும் 10-ம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.  பிரெஞ்ச் ஓபன் போட்டியில் நடால் இதுவரை 11 பட்டங்களை வென்றுள்ளார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று சாதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 18-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக காத்து இருக்கிறார்.

  ஜோகோவிச், பெடரர் ஆகியோர் அவருக்கு கடும் சவாலாக விளங்குவார்கள். பெடரர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று முதல் இடத்திலும், ஜோகோவிச் 15 பட்டம் வென்று 3-வது இடத்திலும் உள்ளனர்.  பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று முத்திரை பதிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அவர் இதுவரை 23 பட்டம் வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 3 முறை கைப்பற்றி உள்ளார். அவருக்கு ஒசாகா, சிமோனா ஹாலெப், முகுருஜா போன்ற முன்னணி வீராங்கனைகள் கடும் சவாலாக இருப்பார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரர் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார்.
  மாட்ரிட்:

  ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி வீரரான ரபேல் நடால், ஸ்டான் வாரிங்காவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-1, 6-2 என்ற நேர்செட்களில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

  இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டித் தொடர்களில் 70 முறை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.  இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் நடால், ஸ்டெபானிசை எதிர்கொள்கிறார்.

  மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐந்தாம் தரநிலைவீரர் டொமினிக் தீமிடம் 3-6, 7-6(11), 6-4 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். வெற்றி பெற்ற டொமினிக் தீம், அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சுடன் மோதுகிறார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஒபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் ஜோகோவிச் - மரின் சிலிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன. #MadridOpen
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு  முந்தைய சுற்றில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் சார்டியை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 7(7) - 6 (2) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

  மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச் லாஸ்லோ டேர்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மரின் சிலிச் 4-6 என அதிர்ச்சிகரமாக தோற்றார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட சிலிச் 2-வது செட்டை 6-3 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.  6-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி வாவ்ரிங்காவிடம் 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 5-ம் நிலை வீரரான தியெம் 6-4, 7-5 என போக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

  காலிறுதியில் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடுகிறார். ரோஜர் பெடரர் தியெம்-ஐ எதிர்த்தும், அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்த்தும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினார்கள். #IndianWellstennis #Federer #Nadal
  இன்டியன்வெல்ஸ்:

  இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 3 முறை சாம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் கிராஜ்னோவிச்சை (செர்பியா) தோற்கடித்து கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

  மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் கரன் கச்சனோவ் 6-4, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சாய்த்து காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். காலிறுதியில் கரன் கச்சனோவ், ரபேல் நடாலை சந்திக்கிறார்.

  இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீரரான கைல் எட்முன்டை (இங்கிலாந்து) விரட்டியடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி நேரமே தேவைப்பட்டது.

  மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் கோல்ஸ்கிரீபரையும் (ஜெர்மனி), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் கார்லோவிச்சையும் (குரோஷியா), கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-4, 6-3 என்ற செட்டில் ஜான் லினார்ட் ஸ்டிரப்பையும் (ஜெர்மனி), போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (7-3), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் டேனிஸ் ஷபலோவையும் (கனடா) தோற்கடித்து காலிறுதியை எட்டினர்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 0-6, 1-6 என்ற நேர்செட்டில் 20 வயதான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 52 நிமிடம் நடந்தது.

  மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் மார்கெடா வோன்ட்ரோசோவாவை (செக் குடியரசு) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.  #IndianWellstennis #Federer #Nadal


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால், மற்றும் செரீனா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். #USOpen #Nadal #serenawilliams
  நியூயார்க்:

  கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

  உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த கரென் கஜோனாவை சந்தித்தார்.

  இதில் நடால் 5-7, 7-5, 7-6 (9-7), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

  மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான டெல் போட்ரா (அர்ஜென்டினா) 7-5, 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் வெர்டஸ் கோவை (ஸ்பெயின்) வீழ்த்தினார்.

  மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீரர் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) ரோனிக் (கனடா) டொமினிக் தீயம் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (மெரிக்கா) 3-வது சுற்றில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை எதிர் கொண்டார்.

  இதில் செரீனா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

  3-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-4 என்ற கணக்கில் அசரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தினார்.

  மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்), பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். #USOpen #Nadal #serenawilliams
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், நடால் ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். #USOpenTennis
  நியூயார்க்:

  கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது.

  2-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்-லினென்டே (போலந்து) மோதினர். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-0 என்ற நேர் செய் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

  மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஸ்டெப்னஸ் 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ரோடினாவை (ரஷியா) வீழ்த்தினார்.

  இதே போல் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), பிளஸ்கோவா (செக்குடியரசு), சபரோவா (செக்குடியரசு) ஜார்ஜர்ஸ் (ஜெர்மனி) செவஸ்டோவா (லாத்வியா), முகுருஜா (ஸ்பெயின்), மகரோவா (ரஷியா), பார்டி (இங்கிலாந்து) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

  போலாந்து வீராங்கனை ரட்வன்ஸ்கா முதல் சுற்றில் ஜெர்மனியின் மரியாவிடம் 3-6, 3-6 என்ற செய் தளத்தில் தோல்வி அடைந்தார்.

  இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் ஒன்று வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) சக நாட்டு வீரர் டேவிட் பெகுருடன் மோதினார். முதல் செட்டை நடால் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டில் பெரர் 4-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது பெரர் உடல் நலகுறைவு காரணமாக விலகினார். இதையடுத்து நடால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

  முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6-3, 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் டிமிட்ரோவை வீழ்த்தினார். ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) இஸ்னர் (அமெரிக்கா), ரோனிக் (கனடா) சீமோன் (பிரான்ஸ்) டெல்பேர்ட்ரோ (அர்ஜென்டினா), ஆண்டர் சன் (தென் ஆப்பிரிக்கா) ஷாபோவலோவ் (கனடா), ஜான்சன் (அமெரிக்கா) டோமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். #USOpenTennis
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் நடால், ஹெலப் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். #nadal #simonahalep

  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-ம் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நடால் (ஸ்பெயின்), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) மோதினர். இதில் நடால் 7-5, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரின் சிலிக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஸ்சலார்ட்ஸ் மேனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை கிரிஸ் இளம்வீரர் டிசிடிசிபாஸ் 6-3, 6-7 (5-7), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார்.  இதேபோல் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டிமிட்ரோவ் (பல்கேரியா), ஸ்வெரேவ் (ஜெர்மனி), ராபின் ஹாஸ் (டென்மார்க்), கரேன் கசனோஸ் (ரஷியா) கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹெலப் (ருமேனியா) 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.  மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ‌ஷரபோவா 3-6, 2-6 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் கார்சியாவிடம் தோற்று வெளியேறினார்.#nadal #simonahalep
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச் #Wimbledon2018
  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் 12-ம் நிலை வீரரான ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இரண்டு பேரும் 10-க்கும் மேற்பட்ட கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர்கள் என்பதால் ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருந்தது.

  முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் வென்றார். 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை நடால் வெளிப்படுத்தினார். இதனால் 6-3 என 2-வது செட்டை கைப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் மல்லுகட்டினார்கள். இதனால் ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(11) - 6(9) என ஜோகோவிச் கைப்பற்றினார். 4-வது செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார்.  இதனால் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என இருவரும் களம் இறங்கினார்கள். இறுதியில் ஜோகோவிச் கையே ஓங்கியது அவர் 10-8 என ஐந்தாவது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

  6-4, 3-6, 7(11)-6(9), 3-6, 10-8 என நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிக் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விம்பிள்டன் அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொள்ள இருக்கும் நடால், மிகப்பெரிய சவாலான போட்டி என்று தெரிவித்துள்ளார். #Wimbldeson2018
  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்களில் ஆண்டர்சன் - இஸ்னெர், நடால் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

  நடால் 2011-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அதிக தொந்தரவு கொடுக்கும் வீரராக கருதப்பட்ட ரோஜர் பெடரர் காலிறுதியில் ஆண்டர்சனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.  இதனால் நடால் சாம்பியன் பட்டம் வெல்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நடால் அப்படி பார்க்கவில்லை ‘‘நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்வது எப்போதும் மிகப்பெரிய சவாலானது’’ என்று தெரிவித்துள்ளார்.

  நடால் 2008 மற்றும் 2010-ல் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தையும், ஜோகோவிச் 2011, 2014 மற்றும் 2015-ல் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜாம்பவான் நடால் 7 வருடத்திற்குப்பின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #Wimbledon2018 #Nadal
  டென்னிஸில் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப் படைத்திருப்பவர் ஸ்பெயின் நாட்டின் ரபெல் நடால். செம்மண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனை மட்டும் 11 முறை வென்ற உலக சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியா ஓபனை 2009-ம் ஆண்டிலும், விம்பிள்டனை 2008 மற்றும் 2010-லும், அமெரிக்கா ஓபரை 2010, 2013, 2017-லும் கைப்பற்றியுள்ளார்.

  32 வயதாகும் ரபெல் நடால் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் காலிறுதிக்கு கடைசியாக 2011-ம் ஆண்டுதான் தகுதி பெற்றிருந்தார். அதன்பிறகு நான்கு சுற்றுகளுக்கு மேல் முன்னேறியது கிடையாது. தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார். அவருக்கு ரோஜர் பெடரர் கடும் சவாலாக இருப்பார்.  நடால் விம்பிள்டன் தொடரில் 2006-ல் இருந்து 2011-ம் ஆண்டு வரை சிறப்பாக விளையாடி இரண்டு முறை சாம்பியன் பட்டமும், மூன்று முறை 2-வது இடமும் பிடித்துள்ளார். 2009-ல் காயம் காரணமாக விளையாடவில்லை. அதன்பின் விம்பிள்டனில் நடாலுக்கு சறுக்கல்தான் ஏற்பட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print