search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நடால்,  ஜோகோவிச்
    X
    நடால், ஜோகோவிச்

    பிரெஞ்சு ஓபன்: காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்-நடால் இன்று மோதல்

    காலிறுதி சுற்றில் விளையாட கேஸ்பர் ரூட், கார்லஸ் அல்காரஸ் உள்ளிட்டோரும் தகுதி பெற்றுள்ளனர்.
    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-2, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். 

    மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனே 7-5, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கீரிஸ் நாட்டின் சிட்சிபாசை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். 

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ரஷியாவின் கச்சனோவை வீழ்த்தி கால்இறுதி போட்டியில் விளையாடி தகுதி பெற்றார். 

    இன்று நடைபெறும் முக்கிய கால்இறுதி ஆட்டம் ஒன்றில் டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனை 13 முறை வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை எதிர்கொள்கிறார். 

    டென்னிஸ் களத்தின் பரம எதிரிகளான இருவரும் இதுவரை 58 முறை மோதியுள்ளனர். இதில் 30 முறை ஜோகோவிச்சும், 28 முறை நடாலும் வெற்றி பெற்றுள்ளனர். 

    Next Story
    ×