என் மலர்

  செய்திகள்

  மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச் - மரின் சிலிச், நடால் - வாவ்ரிங்கா பலப்பரீட்சை
  X

  மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச் - மரின் சிலிச், நடால் - வாவ்ரிங்கா பலப்பரீட்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஒபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் ஜோகோவிச் - மரின் சிலிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன. #MadridOpen
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு  முந்தைய சுற்றில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் சார்டியை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 7(7) - 6 (2) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

  மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச் லாஸ்லோ டேர்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மரின் சிலிச் 4-6 என அதிர்ச்சிகரமாக தோற்றார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட சிலிச் 2-வது செட்டை 6-3 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.  6-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி வாவ்ரிங்காவிடம் 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 5-ம் நிலை வீரரான தியெம் 6-4, 7-5 என போக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

  காலிறுதியில் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடுகிறார். ரோஜர் பெடரர் தியெம்-ஐ எதிர்த்தும், அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்த்தும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
  Next Story
  ×