search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pranai"

    • உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
    • ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹோபன்ஹேகன்:

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், 3-ம் நிலை வீரரான குன்லாவுத் விதித்சரணை (தாய்லாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல்செட்டை தன்வசப்படுத்தி பிரமாதமான தொடக்கம் கண்ட பிரனாய் அடுத்த 2 செட்களில் எதிராளிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.

    1 மணி 16 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் குன்லாவுத் விதித்சரணிடம் வீழ்ந்த பிரனாய் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். அவர் முந்தைய நாளில் நடந்த கால் இறுதியில் நடப்பு ஒலிம்பிக், உலக சாம்பியனான விக்டர் ஆக்சல்சென்னுக்கு(டென்மார்க்) அதிர்ச்சி அளித்து இருந்தார். உலக பேட்மிண்டனில் பிரனாய் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் இந்தியா பெற்ற 14-வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 23-21, 21-13 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியன் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் 'நம்பர் ஒன்' வீரர் அன் சே யங் (தென்கொரியா) 21-19, 21-15 என்ற நேர்செட்டில் 3-ம் நிலை வீரரான சென் யு பெய்யை (சீனா) விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    • காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சீன வீராங்கனையை எளிதாக வீழ்த்தினார் பி.வி.சிந்து
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பிரணாயிடம், சீன தைபே வீரர் தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் சீன வீராங்கனை ஜாங் யீ மன்னை எதிர்கொண்டார்.

    28 நிமிடங்களே நடந்த இந்த போட்டியில், தரவரிசையில் 32 வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜாங் யி மன்னை 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரணாய் 21-19 21-16 என்ற கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை வீழ்த்தினார். காலிறுதியில் அவர் ஜப்பானின் காண்டா சுனேயாமாவை எதிர்கொள்கிறார்.

    ×