என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்லஸ் அல்காரஸ்"

    • இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 44 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
    • ஒட்டுமொத்தமாக 52.80 கோடி ரூபாய் அல்காரஸ்க்கு பரிசுத் தொகையாக கிடைத்தது.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கார்லஸ் அல்காரஸ்- ஜெனிக் சின்னர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காரஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    கடந்த ஆண்டைவிட 39 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 5 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக கிடைத்தது. இந்திய பண மதிப்பில் சுமார் 44 கோடி ரூபாய் ஆகும். ஒட்டுமொத்தமாக 6.09 மில்லியன் டாலர் (52.80 கோடி ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்தது. ஆனால், மொத்த பரிசுத் தொகையையும் அல்காரஸால் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல முடியாதாம்.

    ஏனென்றால் அமெரிக்க சட்டப்படி 37 சதவீதம் வரி செலுத்த வேண்டுமாம். அதன்படி 1.7 மில்லியன் டாலர் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் இல்லாமல் 1.08 மில்லியன் முதல் 5 மில்லியன் வரையில் வருவாய் ஈட்டினால் நியூயார்ச் மாநிலத்திற்கு 9.65 சதவீதம் வரி செலுத்த வேண்டும். அப்படி பார்த்தால் சுமார் பாதி அளவு பணத்தை வரியாக மட்டுமே செலுத்த வேண்டுமாம்.

    அதேவேளையில் அமெரிக்கா- ஸ்பெயின் நாட்டின் வரி ஒப்பந்தத்தின்படி ஒருமுறை வரி கட்டினால், அதன்பின் வரி கட்ட வேண்டாம். அதனால் சொந்த நாடு திரும்பும்போது மீண்டும் வரி கட்டத்தேவையில்லை.

    சின்னருக்கு எதிராக அல்காரஸ் 15 முறை மோதியதில் 10 முறை வெற்றி பெற்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-2 என வெற்றிபெற்றுள்ளார். அதில் இரண்டு முறை அமெரிக்க ஓபனில் கிடைத்த வெற்றியாகும்.

    • ஜானிக் சின்னர் (இத்தாலி) ரூ.414 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் இருக்கிறார்.
    • அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ரூ.396 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தில் உள்ளார்.

    இந்த ஆண்டில் இதுவரை டென்னிஸ் வீரர்களின் வருவாய் விவரம் வெளியாகியுள்ளது.

    இதில் இரண்டாம் நிலை வீரரான அல்காரஸ் ரூ.421 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். அவர் டென்னிசுக்கு வெளியே அதாவது விளம்பர ஒப்பந்தம் மூலம் மட்டும் ரூ.306 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜானிக் சின்னர் (இத்தாலி) ரூ.414 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் இருக்கிறார். அமெரிக்க வீராங்கனை கோகோ காப் ரூ.396 கோடி வருவாய் ஈட்டி 3-வது இடத்தில் உள்ளார். வீராங்கனை களில் அவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார்.

    24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரான ஜோகோவிச் (செர்பியா) ரூ.256 கோடியுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    • 6-3, 7-4 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
    • டிராப்பர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இன்று நடந்த போட்டியில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெடினா) மோதினர். முதல் செட்டை அல்காரஸ் 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் அல்காரஸ் 7-4 என்ற கணக்கில் வென்றார். இதனால் 6-3, 7-4 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜாக் அலெக்சாண்டர் டிராப்பர் (பிரிட்டிஷ்) பெஞ்சமின் டாட் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இதில் டிராப்பர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

    • அல்காரஸ் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    • அல்காரஸ் காலிறுதியில் பிரான்சிஸ்கோ செருண்டோலோ உடன் மோத உள்ளார்.

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    இவர் காலிறுதியில் பிரான்சிஸ்கோ செருண்டோலோ உடன் மோத உள்ளார்.

    • ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேறினார்.
    • ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலிய வீரரை தோற்கடித்தார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஹங்கேரியின் பேபியன் மரோசானுடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 5-7 என இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் அல்காரசும், ஸ்வரேவும் மோத உள்ளனர்.

    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) மோதினர்.
    • முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.

    தோகா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) உடன் மோதினார்.

    இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை ஜிரி லெஹெக்கா கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 3-6, 6-3 மற்றும் 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

    ஜிரி லெஹெக்கா அரையிறுதியில் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.

    ×